சில்க் ஸ்மிதாக்கு போட்டியாக வந்த கிளாமர் நடிகை.. இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்து வந்த பரிதாபம்

சினிமா பொருத்தவரை எப்பொழுதுமே எல்லா படங்களிலும் கிளாமர் காட்சிக்கு முக்கியத்துவம் இருந்திருக்கிறது. அந்த வகையில் கிளாமருக்கு பெயர் பெற்றவர் தான் சில்க் ஸ்மிதா. அந்த காலத்தில் இருந்து இப்பொழுது வரை இவரை பற்றி தெரியாதவர்கள் யாரும் கிடையாது. அப்படிப்பட்ட அவருக்கு இணையாக 90ஸ் காலத்தில் ஒருவர் கிளாமர் நடிகையாக பெயர் பெற்றார்.

இவர் முதலில் சினிமா மேல் இருந்த ஆசையால் நடிப்பதற்கு நுழைந்தார். ஆனால் இவருக்கு சரியாக பட வாய்ப்பு வராததால் 1992 ஆம் ஆண்டு “தலைவாசல்” என்ற படத்தில் ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து “மடிப்பு ஹம்ஸா” என்று அழைக்கப்பட்டார். அந்தக் கவர்ச்சி நடிகை வேற யாரும் இல்லை விசித்திரா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார்.

Also read: சில்க் ஸ்மிதாவை திருமணம் செய்ய ஆசைப்பட்ட வாரிசு நடிகர்.. மனம் திறந்து பேசிய அப்பா இயக்குனர்

இவர் நடித்த படங்களில் அதிகமாக கிளாமர் ரோலில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இவர் நல்ல கதாபாத்திரமாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். ஆனாலும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கிளாமர் ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.

இதனைத் தொடர்ந்து கிளாமர் நடிகை என்ற அடையாளத்தை பெற்றார். இப்படி புகழின் உச்சியில் இருக்கும் பொழுது சினிமா சம்பந்தமே இல்லாத ஒருவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் நடிப்பதற்கு எந்தவித மறுப்பும் கணவர் தெரிவிக்கவில்லை. மேலும் அவர் கிளாமர் ரோலில் நடித்ததால் கணவர் எங்கு சென்றாலும் அதிக அளவில் அசிங்கத்தையும், அவமானத்தையும் சந்தித்திருக்கிறார்.

Also read: முத்து படத்தில் நடித்த விசித்ராவா இது.? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே!

இதனால் அவருடைய கணவர் வேலை செய்ய முடியாமல் தவித்து வந்திருக்கிறார். இது தெரிந்த விசித்திரா இனிமேலும் நாம் நடித்தால் அது சரிப்பட்டு வராது என்று கணவருக்காக நடிப்பை தூக்கி எறிந்து விட்டார். பின்பு கோவா மற்றும் புனேயில், இவர்கள் இருக்கும் இடம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக எந்த தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருக்கிறது.

கணவருக்காக நடித்து வந்த வேலையை தூக்கி எறிந்து விட்டு குடும்பத்தை காப்பாற்றி தற்போது ஒரு அளவிற்கு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்பொழுது விஜய் டிவியில் குக் வித் கோமாளி மற்றும் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் எதிர்மறையான கேரக்டரிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவரது அப்பா அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்பதை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: குக் வித் கோமாளியில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் கோமாளி.. சீசன் 4க்கு தோல்விக்கு இவர்தான் காரணம்