சமீபகாலமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படும் படங்கள் பான் இந்திய படமாக வெளியாகிறது. அப்படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த படங்கள் வசூலிலும் சக்கைபோடு போடுகிறது. அவ்வாறு தெலுங்கு மொழியில் பாகுபலி, கன்னட மொழியை கே ஜி எஃப், ஹிந்தியில் தங்க என்ற படங்கள் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது.
இந்நிலையில் அந்த வரிசையில் தமிழ் மொழியில் எந்த படமுமே வெளியாகவில்லையே என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் மற்ற மொழிகளில் எடுக்கப்பட்ட படங்கள் தமிழில் டப்பிங் செய்து இவ்வாறு பிரமாண்ட வெற்றிபெற்ற நிலையில் தமிழில் இதுபோன்ற படம் எடுக்காதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி இருந்தது.
ஆனால் இந்தப் படங்களின் சாதனைகளை முறியடித்து அப்பவே தமிழ் மொழியில் மிகப் பிரமாண்ட படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெமினி ஸ்டூடியோஸ் தயாரிப்பில், எஸ் எஸ் வாசன் இயக்கத்தில் 1948 இல் வெளியான சந்திரலேகா படம் தான் அது. இப்படம் அப்போதைய காலகட்டத்தில் மிக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தது.
இப்படத்தில் டி ஆர் ராஜகுமாரி, எம் கே ராதா,என் எஸ் கிருஷ்ணன், ரஞ்சன் போன்ற திறமையான கலைஞர்கள் நடிப்பில் உருவான படம் சந்திரலேகா. இப்படத்திற்கு எஸ் ராஜேஸ்வரராவ் இசை அமைத்திருந்தார். இப்படம் தந்தையின் ராஜ்யத்தை ஆள்வதற்காக போராடும் இரண்டு சகோதரர்களின் கதையாகும்.
இப்படம் முதலில் தமிழிலும் பின்னர் ஹிந்தியிலும் தயாரிக்கப்பட்டது. இப்படம் நேர்மையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற டிரம்ஸ் காட்சிகள், செட் மற்றும் வாள் சண்டை காட்சிகள் பலராலும் பாராட்டப்பட்டது.
மேலும் இந்த காலகட்டத்தில் வெளியான பாகுபலி, கேஜிஎஃப், தங்கல் போன்ற படங்களுக்கு முன்னரே தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் இது. மேலும், அந்தக் காலத்திலேயே இவ்வளவு தொழில்நுட்பம் இல்லாத போதும் சந்திரலேகா படத்தில் இந்த அளவுக்கு அளவுக்கு புதுமையான காட்சிகள் எடுத்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.