ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அண்ணனிடம் இருந்து வந்த கிரீன் சிக்னல்.. உச்சகட்ட சந்தோஷத்தில் குதியாட்டம் போடும் அட்லி

Atlee: கிளிக்கு ரெக்கை முளைச்சு போச்சு அதான் ஒரேடியா பறந்து போச்சு என்று அட்லீயை பற்றி பலரும் நக்கல் அடித்து பேசினார்கள். காரணம் விஜய் மூலம் வெற்றி இயக்குனராக பெயர் எடுத்த பின்பு தமிழ் சினிமாவிற்கு டாடா காட்டிவிட்டு பாலிவுட்டில் குடி புகுந்தார். அதற்கு ஏற்ற மாதிரி ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை எடுத்து வசூல் அளவில் மாபெரும் வெற்றியை கொடுத்தார்.

இதனை தொடர்ந்து மறுபடியும் ஷாருக்கான் வைத்து தான் பாலிவுட்டில் களமிறங்க போகிறார் என்று பல பேச்சுக்கள் அடிபட்டது. இதற்கிடையில் விஜய் அவரை கூப்பிட்டு படம் பண்ணலாம் என்று சொன்ன பொழுது கூட அவரை உதாசீனப்படுத்திவிட்டு அட்லீ ஷாருக்கான் பின்னாடியே அலைந்தார். காரணம் அட்லி மிகப்பெரிய வசூல் அளவில் படத்தை கொடுத்ததால் ஷாருக்கான் அவரை விடுவதாக இல்லை.

அதனால் அட்லி மற்றும் ஷாருக்கான் இருவரும் இணை பிரியாத ஒருவராக மாறிவிட்டார்கள். அடுத்தபடியாக விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். அடுத்து இன்னும் இரண்டு வருடங்களில் எலக்சன் வருவதால் அதற்குள் எத்தனை படத்தை பண்ண முடியுமோ அதை எல்லாம் நடித்து விட வேண்டும் என்று விஜய் முடிவு பண்ணி இருக்கிறார்.

Also read: விஜய் கட்சிக்கு இப்படி ஒரு பெயரா.? ஒரு ஓட்டு கூட தேறாது, எச்சரிக்கும் விசுவாசிகள்

அதற்கு ஏற்ற மாதிரி GOAT படத்திற்குப் பின் அட்லியுடன் கூட்டணி வைக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போகிறது. இந்த பேச்சுவார்த்தை முக்கால்வாசி கமுக்கம் ஆகவே முடிந்திருக்கிறது. இதற்கான செய்திகள் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது. அடுத்தபடியாக ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பாளர் உடன் விஜய் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்.

இதற்கான இயக்குனரை தேடும் முயற்சியில் ரகசியமாக போய்க் கொண்டிருக்கிறது. இதெல்லாம் ஓரளவுக்கு முடிவான நிலையில் விஜய் அடுத்தடுத்த படத்தின் தகவல்கள் வெளிவரும். எது எப்படியோ விஜய்யிடம் இருந்து அட்லிக்கு தற்போது ஒரு கிரீன் சிக்னல் வந்துவிட்டது. அதனால் அட்லி இப்போது விஜய்க்கு ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற சந்தோஷத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

Also read: விஜய் லிப்லாக் கொடுத்த 6 ஹீரோயின்கள்.. நச்சுன்னு ஜோவுக்கு கொடுத்த இச்

Trending News