ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பொண்டாட்டியை விட மருமகளை நம்பும் பாண்டியன்.. உஷாராக தப்பித்த மீனா ராஜி, பாக்கியா கொடுத்து ஐடியா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் சொன்னபடி சரவணன் மற்றும் தங்கமயில் சென்னைக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு பண்ணிவிட்டார். அதன்படி தெரிந்த நபரை வைத்து அங்கே ஒரு ரூம் பார்த்தாச்சு என்று வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறார். அதற்கு ஒவ்வொருவரும் அப்படிப்பட்ட ரூம் ஹனிமூன்க்கு செட்டாகாது. தனியாக ஹோட்டலில் ரூம் எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

உடனே பாண்டியன், மீனாவிடம் சொல்லி ட்ரெயினிங் போன ஹோட்டலில் ரூம் புக் பண்ண விசாரித்து சொல்லு என்று சொல்கிறார். அதற்கு தங்கமயில், இந்த குழப்பமே வேண்டாம் நம் ஈசியாக ஆன்லைன் மூலமாக புக் பண்ணலாம் என்று சொல்கிறார். எப்படி தியேட்டருக்கு நாங்க போகும்போது புக் பண்ணனும், அதே மாதிரி ஈசியாக பண்ணலாம் என்று சொல்லிய நிலையில் பாண்டியனுக்கு அதிர்ச்சியாகிவிட்டது.

பாண்டியனுக்கு பெருத்த செலவை இழுத்து விட்ட மருமகள்

அப்பொழுது கோமதி நீங்க ரெண்டு பேரும் படம் பார்க்க போனதற்கு 1500 ரூபாய் செலவாச்சு. அதே மாதிரி இப்போ ஹனிமூன்க்கு ஆன்லைன்ல புக் பண்ணா ரொம்ப காசாகும் என்று சொல்கிறார். அதற்கு தங்கமயில் அப்படி எல்லாம் இல்லை அத்தை ஆன்லைனில் புக் பண்ண டிஸ்கவுண்ட் ஆஃபர் என நிறைய போட்டு கம்மி விலையில் ஹோட்டலை புக் பண்ணலாம் என்று ஐடியா கொடுக்கிறார்.

உடனே தங்கமயில் சொல்வதை நம்பி பாண்டியனும் அப்படி என்றால் ஆன்லைனில் செக் பண்ணி பாரு என்று சொல்கிறார். உடனே தங்கமயில் செக் பண்ணிட்டு 3 நாள் தங்கி சாப்பிடுவதற்கு 5000 ரூபாய் ஆகிறது என்று சொல்கிறார். இதை கேட்டதும் பாண்டியன் அப்படி என்றால் பரவாயில்லை. இது புக் பண்ணி விடு என்று தங்கமயிலை நம்பி விட்டார்.

ஆனால் மீனாவிற்கு சந்தேகம் என்பதால் தங்கமயில் இடம் நல்ல பார்த்து செக் பண்ணிக்கோங்க. ஏனென்றால் சென்னையில் அப்படி ஒரு ஹோட்டல் கிடைக்காது. என்று சொல்லி நிலையில் அனைவரும் ஆமாம் நன்றாக செக் பண்ணு தங்கமயில் என்று சொல்கிறார்கள். அதற்கு தங்கமயில் நான் நல்ல செக் பண்ணிட்டேன் மாமாக்கு கூட மெசேஜ் வரும். நான் புக் பண்ணியதும் அப்பொழுது வேணா எல்லாரும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பாண்டியனின் ஏடிஎம் வாங்கி ஹோட்டலை புக் பண்ணி விடுகிறார்.

அப்பொழுது பாண்டியனுக்கு வந்த மெசேஜில் 5000 ரூபாய் தான் போயிருக்கிறது என்றதும் பாண்டியனுக்கு சந்தோஷமாகிவிட்டது. ஆனால் மீனா, ராஜியிடம் இதில் ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கிறது. பாண்டியன் மாமாவை நல்லா தங்கமயில் ஏமாற்றப் போகிறார். கண்டிப்பாக 5000 ரூபாய்க்கு அந்த ஹோட்டல் கிடைக்காது. இதற்கு பின்னாடி ஒரு பெரிய வில்லங்கம் காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.

அதற்கு ராஜி நான் வேணா சொல்லட்டா என்று கேட்கிறார். உடனே மீனா நமக்கு எதுக்கு தேவையில்லாமல் வம்பு, மாமா பாடு மருமகள் பாடு. நம்ம இதுல தலையிட வேண்டாம் என்று இருவரும் உஷாராகி விட்டார்கள். இதனை தொடர்ந்து தங்கமயில் நைட்டு தூங்கும் பொழுது மெசேஜை பார்க்கும் பொழுது அவர் புக் பண்ணது வெறும் அட்வான்ஸ் தொகை தான்.

அந்த வகையில் மீதம் இன்னும் 20000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது போல் வந்து விட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சியான தங்கமயில், பாக்கியத்திற்கு கால் பண்ணி விஷயத்தை சொல்கிறார். உடனே பாக்கியம் இப்பொழுது எதையும் வீட்டில் சொல்ல வேண்டாம். மாப்பிள்ளையுடன் நீ போயிட்டு வாங்க, அதுக்கப்புறம் பார்த்துக்கலாம். பேசாமல் போய் ஹனிமுனை என்ஜாய் பண்ணு என்று ஐடியா கொடுக்கிறார்.

அதன்படி தங்கமயில் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் சரவணனை கூட்டிட்டு ஹனிமூன் கிளம்பி விடுவார். அதன் பிறகு 20 ஆயிரம் ரூபாய் என்று தெரிந்த பின் தான் பாண்டியனுக்கு வரப்போகிறது ஹார்ட் அட்டாக். தங்கமயிலை கண்மூடித்தனமாக நம்பும் பாண்டியனுக்கு தொடர்ந்து ஏமாற்றமாகத் தான் வந்து கொண்டிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

Trending News