Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

படம் பிடிக்கலான என்ன செருப்ப கழட்டி அடிங்க.. விக்னேஷ் கார்த்திக்கின் உருக்கமான பேட்டி

படம் பிடிக்கலான என்ன செருப்ப கழட்டி அடிங்க.. விக்னேஷ் கார்த்திக்கின் உருக்கமான பேட்டி

vignesh karthik : படத்தை எப்படியாவது ரசிகர்களை பார்த்து விட செய்ய வேண்டும் என்பதற்காக ட்ரெய்லரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் இயக்குனர்கள். அவ்வாறு சமீபத்தில் ஹாட்ஸ்பாட் என்ற படத்தின் டிரைலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் […]

vignesh karthik : படத்தை எப்படியாவது ரசிகர்களை பார்த்து விட செய்ய வேண்டும் என்பதற்காக ட்ரெய்லரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் இயக்குனர்கள். அவ்வாறு சமீபத்தில் ஹாட்ஸ்பாட் என்ற படத்தின் டிரைலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் ரிலீஸுக்கு முன்பே ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை ஹாட்ஸ்பாட் படம் பெற்றது. இந்நிலையில் கடந்த மார்ச் 29 ஆம் தேதி திரையரங்கில் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் நேர்மையான விமர்சனங்களை தான் கொடுத்து வருகிறார்கள்.

ஆனாலும் தியேட்டரில் பெரிய அளவில் கூட்டம் இல்லாததால் வசூல் மிக குறைவாக இருக்கிறது. இதனால் மனமுடைந்து போன ஹாட்ஸ்பாட் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்திருந்தார். 

மலையாள சினிமாவுக்கு கிடைக்கும் வரவேற்பு

அதாவது மலையாள சினிமா படங்களுக்கு இங்கு பெரும் ஆதரவு கொடுத்து வருகிறீர்கள். அதேபோல் தமிழ் படங்களுக்கும் கொடுங்கள். படத்தின் மீதான கவனத்தைப் பெறுவதற்காகத்தான் ட்ரெய்லர் அப்படி வெளியிடப்பட்டது. நல்ல கருத்துள்ள கதையை தான் இந்த படத்தில் காண்பித்துள்ளோம்.

மேலும் தயவு செய்து ஹாட்ஸ்பாட் படத்தை திரையரங்குக்கு சென்று பாருங்கள். இந்த படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள் என்று வேதனையுடன் விக்னேஷ் கார்த்திக் பேசியிருக்கிறார். தனது திறமை மீது நம்பிக்கை வைத்ததால் தான் அவரால் இந்த வார்த்தை சொல்ல முடிகிறது. 

ஆனால் மோசமான காட்சிகள் இடம் பெற்றால் ரசிகர்கள் கண்டிப்பாக படத்தை பார்க்க வருவார்கள் என்று நினைத்ததே அவருக்கு நேர் எதிராக மாறிவிட்டது. ப்ரோமோஷன் இல்லாமல் வெளியான நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி அடைந்து தான் வருகிறது. 

மேலும் ஹாட்ஸ்பாட் படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், ஜனனி ஐயர், கௌரி கிஷன், சுபாஷ் போன்ற பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இவ்வளவு நட்சத்திரங்கள் நடித்தும், கடின உழைப்பு போட்டும் ட்ரைலரால் மொத்தமும் முடிந்து விட்டது. 

இயக்குனரின் இந்த பேட்டிக்குப் பிறகு படத்தின் வசூல் சூடு பிடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.