ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நயன்தாராவை தாண்டி 10 வருடங்களுக்கு அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகை.. கடைசியா ஒத்த ரூபாய் கூலி வாங்கிய சம்பவம்

Actress Nayanthara: தென்னிந்திய சினிமாவை பொறுத்த வரைக்கும் நடிகை நயன்தாராவுக்கு 10 வருடங்களுக்கு மேலாக அதே செல்வாக்கு இருக்கிறது திருமணத்திற்கு பிறகு என்னதான் அவருடைய மார்க்கெட் டல் அடித்து இருந்தாலும் சம்பள விஷயத்தில் இன்னும் நான் ஒரு கெட்டிக்காரி தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் நயன்தாராவுக்கு முன்னாலேயே இப்படி ஒரு நடிகை இருந்திருக்கிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் நயன்தாரா கொஞ்சம் ஏமாளியாக தான் இருந்திருக்கிறார். தனக்கான ஒரு இடத்தை நிர்வகித்துக் கொள்ள அவருக்கு பல வருடங்கள் தேவைப்பட்டது. ஆனால் இந்த செய்தியில் வரும் நடிகை அப்படி அல்ல. சினிமாவுக்கு வந்த போது தனக்கான இடத்தையும் தன்னை சுற்றி யார் இருக்க வேண்டும் என்பதையும் சரியாக தீர்மானித்து ஒரு நெருப்பு போலவே வாழ்ந்து வந்தார்.

சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, முன்னணி நடிகையாக மாறி, தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்து, இன்று தமிழக மக்களால் அம்மா என்று அன்போடு அழைக்கப்படும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் அந்த நடிகை. ஜெயலலிதா ரொம்ப சின்ன வயதிலேயே சினிமாவுக்குள் வந்திருந்தாலும் தொடர்ந்து ஹிட் படங்கள் மற்றும் முன்னணி ஹீரோக்களுடன் அளித்து சட்டென மேலே வந்தவர்.

Also Read:கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணும் சமந்தா.. இரண்டாம் கல்யாணத்தோடு எடுத்த 5 முக்கிய முடிவுகள்

ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்னரே அவரைக் கண்டால் அத்தனை பேரும் நடுங்குவார்களாம். அவரிடம் தேவையில்லாமல் ஒரு வார்த்தை கூட யாராலும் பேச முடியாது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஒரே நடிகை ஜெயலலிதா தான். அவரிடம் படத்தின் இயக்குனர்கள் பேசக்கூட பயப்படுவார்களாம்.

ஆலமரம் போல் வளர்ந்த ஹீரோயின்

அப்படி ஒரு சமயத்தில் இயக்குனர் முக்தா ஸ்ரீநிவாசன் எழுதிய கதை ஒன்று ஜெயலலிதாவுக்கு பிடித்து போனது. அந்த இயக்குனரிடம் ஏன் இந்த கதையை எனக்கு சொல்லவில்லை என்று கேட்டு இருக்கிறார். அதற்கு, இயக்குனர் நீங்கள் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின், இந்த படத்தின் பட்ஜெட்டுக்கு உங்கள் சம்பளம் ஒத்து வராது என சொல்லியிருக்கிறார். அதற்கு ஜெயலலிதா, கதை எனக்கு பிடித்து போய் விட்டது, எனக்கு ஒரு ருபாய் சம்பளம் கொடுங்கள் போதும் என்று சொல்லியிருக்கிறார்.

முக்தா ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் ஜெயலலிதா மற்றும் முத்துராமன் நடிப்பில் சூரியகாந்தி என்னும் பெயரில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதனால் அந்த இயக்குனர் ஜெயலலிதாவிடம் ஒரு செக்கை நீட்டியிருக்கிறார். ஆனால் ஜெயலலிதா நான் கொடுத்த வாக்கை மீறுவதில்லை, எனக்கு ஒரு ரூபாய் மட்டும் போதும் என்று சொல்லி செக்கை வாங்கவில்லையாம்.

Also Read:டாக்டர் படிப்பு வேண்டாம் எனக்கு தூக்கி எறிந்து விட்டு நடிக்க வந்த 6 பிரபலங்கள்.. அப்பா பேச்சையும் மீறி சினிமாவுக்கு வந்த அதிதி ஷங்கர்

 

 

Trending News