வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாலாவின் 2 படங்களில் நடித்த ஒரே ஹீரோயின்.. ஹீரோ மீது இருந்த கிரஸ்ஸால் சகிச்சிக்கிட்ட பால் டப்பா

Director Bala: குரங்குக்கு வாக்கப்பட்டால் மரத்துக்கு மரம் தாவி தான் ஆகணும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க, அது சில நேரத்துல நம்ம வாழ்க்கையில நிஜமாகிடும். ஒரு சில விஷயங்கள் நமக்கு பிடித்து விட்டால் அதுக்காக பிடிக்காத சிலவற்றை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அப்படித்தான் ஹீரோ ஒருத்தர் மீது இருந்த பயங்கர க்ரஷ் காரணமாக இயக்குனர் பாலா உடன் இணைந்து தொடர்ந்து இரண்டு படங்களில் பணியாற்றி இருக்கிறார் பால் டப்பா நடிகை ஒருவர்.

பாலா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் விக்ரம் மற்றும் சூர்யாவுக்கு சினிமாவில் பெரிய பிரேக் கொடுத்தார் என்பதில் நிதர்சனமான உண்மை. அதை தாண்டி முன்னணி ஹீரோக்கள் யாருமே பாலா உடன் இணைந்து படம் பண்ண வில்லை. இதற்கு உண்மை காரணம் பாலா செய்யும் டார்ச்சர்கள் தான். பாலாவுக்கு அவருடைய படத்தில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கொஞ்சம் அழகாக இருந்தால் கூட பொறுக்காது.

இயல்பாக காட்டுகிறேன், யதார்த்தமாக காட்சிகளை எடுக்கிறேன் என்ற பெயரில் நடிகர்களை எவ்வளவு சித்திரவதை செய்ய முடியுமோ செய்துவிடுவார். அடி தாங்க முடியாமல் படத்தை விட்டு ஓடியவர்கள் கூட உண்டு. அப்படி இருக்கும் போது பாலா இயக்கத்தில் வெளியான 2 படங்களில் தொடர்ந்து ஒரு நடிகை நடித்திருப்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read:இயக்குனர் பாலாவுக்கு இப்படி ஒரு நண்பரா.? இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம்

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் லிஸ்டில் இன்று வரை இருப்பவர் தான் நடிகை லைலா. கொஞ்சம் துருதுருவென கேரக்டர், பப்லியான சுபாவம் என்று ஹீரோயின் கேரக்டரை பிக்ஸ் செய்து விட்டாலே லைலா தான் அதில் ஒப்பந்தம் ஆவார். அப்படி ஜாலியாக நடித்துக் கொண்டிருந்த லைலா பாலாவின் நந்தா மற்றும் பிதாமகன் படங்களில் நடித்தது எல்லோருக்கும் பெரிய ஆச்சரியம் தான்.

பாலா எவ்வளவு டார்ச்சர் பண்ணினாலும் பரவாயில்லை என லைலா நடித்ததற்கு பெரிய காரணம் நடிகர் சூர்யா தான். லைலாவுக்கு சூர்யா மீது பெரிய அளவில் கிரஷ் இருந்ததாக லைலா நிறைய பேட்டிகளில் பகிர்ந்து இருக்கிறார். அதேபோல் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலிப்பது தனக்கே த்ரீ ரோசஸ் படப்பிடிப்பு சமயத்தில் தான் தெரியும் எனவும் சொல்லி இருக்கிறார்.

லைலா மட்டுமில்லை, சூர்யாவுடனான திருமணத்திற்கு பிறகு ஜோதிகா கொடுத்த பேட்டியில் சூர்யாவுடன் நடித்த ஹீரோயின்களின் லைலா தான் அவருக்கு சிறந்த ஜோடி என்று சொல்லி இருக்கிறார். சூர்யா மீது இருந்த அதிக அளவு கிரஷ் தான் பாலா படத்தில் தொடர்ந்து நடிக்கும் தைரியத்தை லைலாவுக்கு கொடுத்து இருக்கிறது. நீங்க என்ன டார்ச்சர் வேணா பண்ணுங்க எனக்கு சூர்யா கூட நடிச்சா ஓகே என தெம்பாக வேலை செய்திருக்கிறார் இந்த பால் டப்பா நடிகை.

Also Read:இயக்குனர் பாலாவால் நொந்து போன அருண் விஜய்.. படாதபாடு பட்டு வரும் பரிதாபம்

Trending News