திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஓடி ஒளியுற ஆள் இல்ல, தேடி அடிக்கிற ஆளு.. விஷால் அறிக்கை விட்ட நாளில் நடந்த தரமான சம்பவம்

Vishal : சமீபத்தில் விஜய் கட்சி தொடங்கிய நிலையில் விரைவில் விஷாலும் அரசியலுக்கு வர உள்ளதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஏற்கனவே நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்த விஷால் இதுவரை எதுவுமே செய்யவில்லை என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இதில் அரசியலில் இறங்கி என்ன பண்ணப் போகிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விஷால் அறிக்கை விட்ட நாளிலேயே இன்னொரு சம்பவமும் நடந்திருக்கிறது. அதாவது தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இணையதளம் தான் தமிழ் ராக்கர்ஸ்.

திரையரங்குகளில் படம் வெளியான உடனே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் இலவசமாக டவுன்லோடு செய்யும் அளவிற்கு படத்தை பதிவிறக்கம் செய்து விடுகின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

Also Read : நடு ரோட்டில் உட்கார்ந்து அழுது புரண்ட விஷால்.. தன்கையே தனக்குதவின்னு லண்டன் புறப்பட்ட சங்கத் தலைவர்

குறிப்பாக விஷாலின் சண்டக்கோழி 2, ஆக்சன், எனிமி போன்ற படங்கள் ரிலீஸ் ஆன உடனே இந்த இணையதளத்தில் வெளியாகிவிட்டது. இதனால் பலமுறை இந்த இணையத்தை முடக்கச் சொல்லி வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் ராக்கர்ஸ் தொடர்ந்து தனது ஸ்பெல் பெயரை மாற்றி படங்களை வெளியிட்டு தான் வருகிறது.

இந்நிலையில் விஷால் அறிக்கை விட்ட அதே நாளில் தமிழ் ராக்கர்ஸ் 2.0 புது பொலிவுடன் வர இருக்கிறதாம். அதாவது ஐபிஎம் பிளாட் ஃபார்மில் இருந்து ஐபிஎஸ் வேருஷனுக்கு மாற்றுகிறார்களாம். ஆகையால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை பின்பற்றுவோர் புதிதாக ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டுமாம்.

இதன் மூலம் நல்ல தரத்துடன் படங்களை அன்லிமிடெட்டாக டவுன்லோட் செய்ய முடியும். திருட்டு விசிடி மற்றும் தமிழ் ராக்கர்ஸ் ஆகியவற்றை ஒழிக்க பல முயற்சிகள் விஷால் கொண்டு வந்தாலும், ஓடி ஒளியுற ஆள் இல்ல, தேடி அடிக்கிற ஆளு என அவர் அறிக்கை விட்ட அதே நாளிலேயே தில்லாக தமிழ் ராக்கர்ஸ் இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறது.

tamil-rockers
tamil-rockers

Also Read : நடிகர் சங்கத்திற்கு பணம் தர யோசிக்கும் ரஜினி.. வாய் வார்த்தையுடன் நிறுத்திக் கொண்ட விஷால்

Trending News