வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

அரக்கனை கண்டுபிடித்து தலைய வெட்டணும்.. திரில்லர் காட்சிகளுடன் வெளியான சுழல் 2 ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

Suzhal 2 Trailer: கடந்த 2022 ஆம் ஆண்டு கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சுழல் வெப்சீரிஸ் வெளியானது. நொடிக்கு நொடி திருப்பமும் விறுவிறுப்பும் கலந்த இந்த தொடர் ஆடியன்சை கவர்ந்தது.

அதை அடுத்து தற்போது பார்ட் 2 ரெடியாகிவிட்டது. வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த சீரிஸ் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது.

அதில் சிறையில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை வெளியில் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார் வக்கீல் லால்.

சுழல் 2 ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

ஆனால் திடீரென அவர் இறந்து விடுகிறார். அதை விசாரிக்கும் கதிர் 8 இளம் பெண்கள் மீது சந்தேகப்படுகிறார். அதைத்தொடர்ந்து வெளிவரும் மர்மங்கள் தான் சீசன் 2 கதை.

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் திரில்லர் கலந்த விறுவிறுப்புடன் நகரும் என்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.

அதிலும் அரக்கனை கண்டுபிடித்து தலையை வெட்டணும் என்ற வசனம் வரும் போது ஆர்யா அரக்கன் லுக்கில் வருவது எதிர்பாராத சர்ப்ரைஸ்.

அதேபோல் கயல் சந்திரன், மஞ்சிமா மோகன், கௌரி கிஷன், மோனிஷா என பலர் நடித்துள்ளனர். அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருக்கும் இந்த சுழல் 2 வெப் தொடரை காண ஓடிடி பிரியர்கள் இப்போது ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Trending News