கேமராவுக்கு முன்பு தான் தன்னடக்கம் எல்லாம்.. முதல் வெற்றிக்கே தலைகீழாய் ஆடிய விஜய் சேதுபதி, புட்டு புட்டு வைத்த பத்திரிக்கையாளர்

Vijay Sethupathi
Vijay Sethupathi

Vijay Sethupathi: நடிகர் விஜய் சேதுபதியை மக்கள் முதலில் ஏற்றுக் கொண்டதற்கு காரணமே அவருடைய எளிமைதான்.

எவ்வளவு உச்சிக்கு சென்றாலும் தன்னிலை மாறாமல் இருக்கிறார் என தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் விஜய் சேதுபதியின் தன்னடக்கத்திற்கு பின்னால் இருக்கும் உண்மை முகத்தை வெளியில் கொண்டு வந்திருக்கிறார்.

தலைகீழாய் ஆடிய விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி பத்து வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் படாத பாடுபட்டு அதன் பின்னர் தென்மேற்கு பருவக்காற்று என்னும் படத்தின் மூலம் ஹீரோ ஆனார்.

அதன் பிறகு சூது கவ்வும், பீட்சா போன்ற படங்கள்தான் இவரை மக்கள் ஹீரோவாக ஏற்றுக் கொள்ள காரணம்.

பல வருடங்கள் போராடிய விஜய் சேதுபதிக்கு முதல் வெற்றியை தாக்குப் பிடிக்க கூட முடியவில்லை என வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

முதல் படத்தின் வெற்றியின் போது ஒரு பிரபல ஹோட்டலில் வெற்றி விழா கொண்டாடப்பட்டிருக்கிறது.

மீடியா ஆட்கள் இருப்பார்கள் என்று தெரிந்தும் விஜய் சேதுபதி அதிக அளவு மது போதையில் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் ஹோட்டல் காரர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.

ஹோட்டலின் வரவேற்பு அறையில் அமர்ந்து கொண்டு அந்த இடத்திற்கு பிரியாணி கொண்டு வர வேண்டும் என சர்வர்களை டார்ச்சர் செய்திருக்கிறார்.

இவ்வளவுதான் விஜய் சேதுபதியின் கேமராவுக்கு பின்னால் இருக்கும் தன்னடக்கம் என அந்தணன் பேசி இருக்கிறார்.

Advertisement Amazon Prime Banner