புதன்கிழமை, ஜனவரி 22, 2025

Kavin : 12 வருஷ போராட்டத்தை முடிச்சு விட்டுறாதீங்க.! என்னது அடுத்த தளபதியா.? கெஞ்சிய கவின்

கவின் டாடா வெற்றியை தொடர்ந்து இப்போது நடித்திருக்கும் படம் தான் ஸ்டார். இந்த படம் வருகின்ற மே பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் ஸ்டார் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்தப் படத்தின் ப்ரோமோஷனுகாக இப்போது கவின் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்போது விஜய் மற்றும் சஞ்சய் ஆகியோரை பற்றி பேசி இருந்தார். விஜயைப் பற்றி பெரிதாக செய்தித்தாள்களில் வெளியாகிறது.

நேரில் அவரைப் பார்க்கும்போது நம்மைப் போல தான் மிகவும் எளிமையாக தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்று இருப்பார். மேலும் விஜய்யின் மகன் என்ற உடன் எனக்கும் ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் நேரில் போய் பார்க்கும்போது மொத்தமாக வேறு மாதிரி இருந்தது.

அடுத்த தளபதி கவினா?

விஜய்யை விட மிகவும் எளிமையாக அவரது மகன் சஞ்சய் இருக்கிறார். கதை தொடர்பான கூட்டம் நடந்தது. இது குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்ற கவின் கூறினார். வேலும் பத்திரிக்கையாளர்களிடம் கவின் பேசிய போது அடுத்த தளபதி நீங்கள் தான் என்ற பேச்சு வருகிறது.

இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர். ஐயோ என்னோட 12 வருஷ போராட்டம் சினிமா. ஏதாவது சொல்லி முடிச்சு விட்டுறாதீங்க என்று கெஞ்சாத குறையாக தான் கவின் பேசி இருந்தார். சின்னத்திரையில் இருந்து சிவகார்த்திகேயன் வரிசையில் இவ்வளவு பெரிய இடத்தை பிடித்திருக்கிறார் கவின்.

கண்டிப்பாக ஸ்டார் படம் அவரது கேரியரில் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எல்லோரும் திரையரங்குக்கு சென்று ஸ்டார் படத்தை பாருங்கள் என்றும் கவின் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Trending News