வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

உனக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா.. பாரதி சொறிஞ்சுவிட்ட கண்ணம்மா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா ஆட்டி வைத்ததற்க்கு எல்லாம் ஆடிக்கொண்டிருக்கும் பாரதி, தனக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் தன்னுடைய குழந்தைகள் இல்லை என கண்ணம்மாவை 10 வருடங்களாக ஒதுக்கி வைத்திருக்கிறார்.

ஒரு டாக்டராக இருக்கும் பாரதி, டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்து தெரிந்து கொள்ளாத முட்டாளாக இருக்கிறார். இன்னிலையில் அவர் மருத்துவராக இருக்கும் மருத்துவமனையில் பிரசவமான மனைவியை கணவர் ஒருவர் சந்தேகப்படுகிறார்.

Also Read: புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் விஜய் டிவி.. சன் டிவியை ஒழித்து கட்ட பக்கா பிளான்

அந்த சமயம் பெரிய நியாயஸ்தன் மாதிரி சந்தேகப்பட்ட கணவரை டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்க பாரதி சொல்கிறார். ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லும் பாரதி பெரிய யோக்கியமா! உனக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா என்று கண்ணம்மா அந்த இடத்தில் டாக்டர் பாரதியை சொறிஞ்சு விடுகிறார்.

இதன் பிறகு அதை சிந்தித்துக் கொண்டிருக்கும் பாரதியிடம் மனசாட்சி பேசுகிறது. அப்போது பாரதி ‘நாமும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தது பார்த்திருக்கலாமே’ என்றும் யோசிக்கிறார். பாரதிக்கு குழந்தை பெறும் தன்மை இல்லை என்பதனால்தான் கண்ணம்மாவின் மீது அவர் சந்தேகப்பட்டார்.

Also Read: விஜய் டிவியை தூக்கி எறிந்த சீரியல் நடிகை.. ஜீ தமிழும் கைவிட்ட பரிதாபம்

ஆனால் இப்போது வெண்பா வயிற்றில் வளரும் குழந்தைக்கு மட்டும் அப்பாவாக முடிவெடுத்திருப்பது எந்த விதத்தில் சரி என்றும் அவருக்குள் கேள்வி எழும்புகிறது. இந்த சீரியலில் பாரதிக்கு சுய புத்தியை சுத்தமாக இல்லை.

இப்படி முட்டாள்தனமாக கதையை வேறொரு கோணத்தில் காட்டிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலை சீக்கிரம் முடித்து விடுங்கள் என்றும் சின்னத்திரை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கழுவி கழுவி ஊற்றுகிறார்.

Also Read: பிக் பாஸ் சீசன் 6 கன்ஃபார்மான 9 ஆண் போட்டியாளர்கள்.. ஆண்டவரை சந்திக்க தயாராகும் போட்டியாளர்கள்

Trending News