மிரட்டிய பயம், சட்டென யோசித்த முடிவு.. நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம்

Devayani: தமிழ் சினிமாவுக்கு நீ வருவாயா என்ற அழகிய காதல் கதையை கொடுத்த இயக்குனர் தான் ராஜகுமாரன்.

நடிகை தேவயானியின் காதல் கணவர் ராஜகுமாரனின் பர்சனல் வாழ்க்கை அவ்வளவு பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் சமீப காலமாக அவர் கொடுக்கும் பேட்டிகள் மக்களுக்கு வாழ்க்கை பாடமாகவே இருக்கிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஜகுமாரன் தான் செய்த பெரிய தவறு ஒன்றை சுட்டிக்காட்டி பேசி இருந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு தேவயானியை ஹீரோயினாக வைத்து இவர் ஹீரோவாக நடித்து திருமதி தமிழ் என்ற படத்தை தயாரித்து இயக்கி இருந்தார்.

சட்டென யோசித்த முடிவு

இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து விட்டதாம். அப்போது இவருக்கு பெரிய பயம் வந்து விட்டதாம்.

என்ன நம்ம கையில் இருக்கிற காசை இப்படி தேவையில்லாமல் செலவு செய்கிறோம் என்று நினைத்தாராம். உடனேயே கையில் மீது இருந்த காசை வைத்து வீடு கட்டி விட்டாராம்.

கையில் காசு இருந்தால் இது போன்று தேவையில்லாத ஆசைகள் வரும் என்று நினைத்துதான் இதை செய்தாராம்.

நம்மில் பலரும் பொருளாதார ரீதியாக யோசிக்காமல் சில முடிவுகளை எடுப்போம். அதனால் பண நஷ்டம் ஏற்படும் போது இனி இதை செய்யவே கூடாது என்று நினைப்போம்.

ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் அதே தவறை தான் செய்வோம் அப்படிப்பட்டவர்களுக்கு ராஜகுமாரன் சொல்லியது மிகப்பெரிய வாழ்க்கை பாடம்.

Leave a Comment