புதன்கிழமை, ஜனவரி 8, 2025

நாலு வருட பாக்ஸ் ஆபிஸ் சாதனை.. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ரெக்கார்டை உடைத்த ஒரே படம்

தென்னிந்திய சினிமாவில் கடந்த இரண்டு வருடங்களாக தரமான படங்கள் வர ஆரம்பித்து விட்டன. லோ பட்ஜெட் படங்கள் கூட நல்ல கதையம்சத்தோடு இருந்தால் வசூலில் கோடிகளை வாருகின்றன. அதிலும் சமீபத்திய ரிலீஸ்களான பொன்னியின் செல்வன், காந்தாரா போன்ற படங்கள் எல்லாம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி அடைந்ததோடு பொருளாதார ரீதியாகவும் கை கொடுத்திருக்கின்றன.

முன்பெல்லாம் பெரிய ஹீரோக்களின் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் ஜெயித்து நிற்கும் என்ற பொதுவான கருத்து இருந்தது. ஆனால் சமீப காலமாக சின்ன, சின்ன ஹீரோக்களின் படங்கள் கூட பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் மிகப்பெரிய சாதனையை படைத்து விடுகின்றன. தமிழில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற லவ் டுடே படமே இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Also Read:தேடி போன மோகன்லால்.. தட்டி கழித்த கமலஹாசன், ரிஷப் ஷெட்டி

அப்படி ஒரு படம் தான் மலையாள சினிமா உலகையே வசூலில் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. மலையாள பாக்ஸ் ஆபீஸ் உலகின் கிங்காக இருப்பவர்தான் மோகன் லால். இவர் பல வருடங்களாக தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் வசம் கவர்ந்து இழுத்து வைத்திருக்கிறார். எல்லா வயதினரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.

இவருடைய படங்கள் வசூலில் 100 கோடியை தாண்டி விடுகின்றன. கடந்த நான்கு வருடங்களாக இவருடைய சாதனையை வேறு எந்த படங்களாலும் முறியடிக்க முடியாமல் இருந்தது. அதில் ஒன்று இவர் நடித்த லூசிபர் திரைப்படம். இந்த படத்தின் வசூலை பார்த்து ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகமும் பிரமித்து போனது என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read:வெளிநாடுகளில் மாஸ் காட்டிய 3 மலையாள திரைப்படங்கள்.. மனிதத்தை போற்றும் ‘2018’

தற்போது மோகன்லாலின் இந்த சாதனையை 2018 திரைப்படம் முறியடித்து இருக்கிறது. நடிகர்கள் டோவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன் ஆகியோரது நடிப்பில் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோஷப் இயக்கத்தில் வெளியானது. இந்த படம் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.

கடந்த மே ஐந்தாம் தேதி ரிலீசான இந்த படம் 11 நாட்களில் 100 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படம் 12 நாட்களில் 100 கோடியை எட்டியது. இதன் மூலம் இந்த 2018 திரைப்படம் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் சாதனையை முறியடித்து இருக்கிறது. இந்த படத்தின் வசூல் வரும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:கமலால் ஒரே படத்தால் காணாமல் போன தயாரிப்பாளர்.. மீண்டும் கை பிடித்து தூக்கி விடும் சூப்பர் ஸ்டார் மோகன்லால்

Trending News