Suriya : சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ரெட்ரோ படம் சரியாக போகவில்லை. இதை அடுத்து அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ரெட்ரோ.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். அண்மையில் இந்த படத்தில் ஒரு பாடல் வெளியாகி வைப் ஆகி கொண்டிருக்கிறது.
மேலும் ரெட்ரோ படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிறது. இதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகி இருக்கிறது.
சூர்யாவை விட இரண்டு வயது இளமையானவர் அவருக்கு அப்பாவாக நடிக்கிறார்
அதாவது இப்படத்தில் சூர்யாவுக்கு அப்பாவாக மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிக்கிறார். மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகரான இவர் தமிழில் ரெட்ரோ மற்றும் தக் லைஃப் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இவருக்கு 47 வயதாகிறது. ஆனால் சூர்யாவுக்கு 49 வயதாகும் நிலையில் ஜோஜு ஜார்ஜ்க்கு மகனாக நடிக்கிறார். அப்பாவை விட மகன் சீனியர் என்று இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
மேலும் கார்த்திக் சுப்புராஜின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ரெட்ரோ படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இதன் மூலம் சூர்யா கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.