செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

மாஜி காதலிக்கு உதவாத மாஸ் ஹீரோ.. கடுப்பில் இருக்கும் நடிகை

பிரபல நடிகை சமீபத்தில் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்ட நிலையில் ஹீரோ உதவாததால் செம அப்செட்டில் இருக்கிறாராம். அதாவது மாஸ் ஹீரோ மற்றும் இந்த நடிகை ஆரம்பத்தில் பல படங்களில் ஜோடி போட்டு நடித்த நிலையில் இருவரையும் சேர்த்து வைத்து கிசு கிசுக்கள் வெளியானது.

இதைத்தொடர்ந்து மாஸ் ஹீரோவின் மனைவி இனி அந்த நடிகையுடன் நடிக்க கூடாது என கண்டிஷன் போட்டுவிட்டார். அப்போது மனைவி சொல்லே மந்திரம் என்று இருந்த ஹீரோ அதன் பிறகு நடிகையுடன் நடிப்பதை விட்டுவிட்டார். இந்நிலையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிகையுடன் ஹீரோ நடித்திருந்தார்.

இந்த படத்தில் இந்த நடிகை தான் வேண்டும் என்று ஹீரோ ஏற்கனவே கேட்டுக் கொண்டாராம். இந்த விஷயம் ஹீரோவின் மனைவிக்கு தெரிந்து வீடே ரெண்டு ஆகிவிட்டது. அதோடு மனைவியும் ஹீரோவை விட்டு பிரிந்து விட்டார். பழையபடி நடிகையுடன் ரிலேஷன்ஷிப் வைத்துள்ளார் ஹீரோ.

Also Read : கடுப்பில் போனை கட் செய்த ஹீரோ.. விரத்தியில் கிரஷ் நடிகை

இந்நிலையில் சமீபத்தில் நடிகைக்கு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டிருந்தது. இதற்காக பல பிரபலங்கள் குரல் கொடுத்து இருந்தனர். ஆனால் மாஸ் ஹீரோ நடிகைக்காக ஒரு டுவிட் கூட செய்யவில்லையாம். இதனால் உச்சகட்ட கடுப்பில் இருந்துள்ளார் நடிகை.

அதன் பிறகு பொது வழியில் இவ்வாறு சொன்னால் இது வேறு மாதிரி ஆகிவிடும். ஏற்கனவே நம்மளை பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் போய்க் கொண்டிருக்கிறது என்று நடிகையை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஹீரோ இறங்கி இருந்தார். ஆனால் நடிகை எதையும் காதில் வாங்கும் நிலைமையில் இல்லையாம்.

Also Read : பொட்டி பாம்பாய் அடங்கிய ஹீரோ.. காரியத்தை சாதித்துக் கொண்ட மனைவி

Trending News