TN assembly: இன்றைய தமிழக சட்டசபை ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே போர்களமாக மாறி இருக்கிறது. ஆளும் கட்சிக்கும், ஆளுநர் ரவிக்கும் ஏற்கனவே பல கட்டங்களில் வாய்க்கா தகராறு நடந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே போன வருடத்தின் சட்டசபை கூட்டத்தில் முதல்வர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் இன்று கூடிய சட்டசபையில் போது தன்னுடைய உரையை வாசிக்காமல் கூட வெளியேறி இருக்கிறார்.
போர்க்களமாக மாறிய இன்றைய சட்டசபை!
இன்று ஒன்பதரை மணி அளவில் சபாநாயகர் சட்டசபைக்கு வந்த ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று இருக்கிறார்.
ஆளுநர் உள்ளே வந்ததும் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டிருக்கிறது. இந்த பாடல் முடிந்தவுடன் தன்னுடைய உரையை கூட வாசிக்காமல் ரவி வெளியேறிவிட்டார்.
அவர் ஏற்கனவே முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்.
ஆனால் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால் கருத்து முரண்பாடு ஏற்பட்டு வெளியேறி விட்டதாக தெரிகிறது.
அது மட்டும் இல்லாமல் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் யார் அந்த சார் என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்து கொண்டு தமிழக சட்டசபைக்கு வந்திருக்கிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழகம் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி போனில் பேசிய அந்த சார் யார் என்பதுதான் இப்போது பெரிய பிரச்சனையாக பூதாகராம் எடுத்து இருக்கிறது.
இதை குறிக்கத்தான் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் இவ்வாறு செய்திருக்கிறார்கள்.