எதிர்நீச்சல் 2 சீரியலில் சக்தி ஜனனிக்கு இடையே வந்த குந்தவை.. குணசேகரன் குடும்பத்தை பழிவாங்க காய் நகர்த்தும் கூட்டம்

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் குடும்பம் சின்ன பிணமாக சிதறி கிடக்கிறது. இதுல வீட்டுக்கு வாழ வந்த நான்கு மருமகள் நாங்கள் சாதிக்கப் போகிறோம் என்ற வெறியுடன் வீட்டை விட்டு கிளம்பி தற்போது தங்குவதற்கு வீடு இல்லாமல் அல்லல் பட்டு வருகிறார்கள். அப்பொழுது நந்தினி, சாருபாலா கிட்ட உதவி கேட்கலாம் என சொல்கிறார்.

அதற்கு ஜனனி நம்முடைய வெற்றியை நோக்கி நாம் பயணிக்கும் போது மற்றவர்களிடம் நாம் எந்த உதவியும் எதிர்பார்க்கக் கூடாது என்று சொன்னார். ஆனால் ரேணுகா, ஜீவானந்தம் இடம் உதவி கேட்கலாம் என்று சொல்லும் பொழுது அனைவரும் வாயை மூடிக்கொண்டு உதவி கேட்டு விடுகிறார்கள். அந்த இடத்தில் ஜீவானந்தம் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட ஒரு காட்சி.

அதே சமயத்தில் வீட்டை விட்டு வெளியே போங்க என்று சொன்ன குணசேகரின் அம்மா தற்போது ஜோசியக்காரர் சொல்வதைக் கேட்டு மருமகளிடம் கெஞ்சி கூத்தாடி ராமேஸ்வரத்துக்கு போயிட்டு வந்து வீட்டுக்கு கூட்டிட்டு வரவேண்டும் என வாசலில் நின்று போராடுகிறார். ஆனால் நீங்கள் என்ன குட்டிக்கரணம் பண்ணினாலும் நாங்கள் மாற மாட்டோம் என்று அனைவரும் வீட்டுக்குள் போய்விட்டார்கள்.

குணசேகரன் குடும்பத்தை பழிவாங்க காய் நகர்த்தும் கூட்டம்

ஆனாலும் குணசேகரன் அம்மா பிடிவாதமாக வாசலில் நின்றதால் ரேணுகா ஈஸ்வரி மற்றும் நந்தினி பேசப்போகிறார்கள். பிறகு எப்படியோ செண்டிமெண்ட் ட்ராமா போட்டு இவர்களை கவுத்துவிட்டு ராமேஸ்வரத்துக்கு பரிகாரம் செய்ய சம்மதத்தை வாங்கி விடுவார்கள்.

இன்னொரு பக்கம் சக்தி குந்தவையுடன் சேர்ந்து செய்யும் பிசினஸ் பற்றி ஜனனிக்கு தெரிந்த நிலையில் அதைப்பற்றி கேட்பதற்காக சக்தியை தேடி போகிறார். அப்படி சக்தி மற்றும் ஜனனி பேசும்போது ஜனனி கிட்ட கேள்விக்கு சக்தியால் சரியான பதில் சொல்ல முடியாது கௌதமை வைத்து தேவையில்லாத வார்த்தைகளை விட்டு ஜனனியை கஷ்டப்படுத்தி சக்தி கேள்வி கேட்கிறார்.

அந்த வகையில் சக்தி மனசும் மாறிவிட்டது என்பதற்கு ஏற்ப தற்போது குந்தவை, ஜனனி சக்திக்கு இடையே விரிசலை ஏற்படுத்தி விட்டார். இன்னொரு பக்கம் சொத்து பணத்தை எல்லாம் தூக்கிட்டு போன கதிர் எங்கே போனார், என்ன ஆனார் என்ற விவரம் எதுவும் தெரியாமல் தலைமறைவாக இருக்கிறார். அடுத்து நம்ம போட்ட பிளான் படி எல்லாம் நடக்குமா என்ற கவலையில் அறிவுகரசி, குணசேகரன் வீட்டில் இருக்கிறார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது குணசேகரன் குடும்பத்தை பழி வாங்குவதற்காக தான் குந்தவை மற்றும் அறிவுக்கரசி திட்டம் போட்டு காய் நகர்த்துகிறார்கள் என்பது தெரிகிறது. ஆக மொத்தத்தில் எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தை பொருத்தவரை எதுவும் உருப்படி இல்லாமல் இஷ்டத்துக்கு கதை நகர்ந்து வருகிறது

Leave a Comment