சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

லைக்காவுக்கு டஃப் கொடுக்கும் பெரிய தல.. கஜானாவை காலி செய்து 5 படங்களை கைப்பற்றிய தயாரிப்பு நிறுவனம்

Lyca Productions: தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட பரிட்சயமான தயாரிப்பு நிறுவனங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சன் பிக்சர்ஸ், லைக்கா, 7 ஸ்டுடியோ ஏஜிஎஸ் என பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவனம் இவர்கள்தான்.

இதில் லைக்கா இப்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் இவர்களில் கைக்கு வந்து தான் அடுத்து கைமாறுகிறது. ரஜினிகாந்த், கமல், அஜித் என அத்தனை பெரியோ ஹீரோக்களின் படங்களையும் தயாரிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட லைக்காவுக்கு ஆட்டம் கொடுக்கும் வகையில் ஒரு தயாரிப்பு நிறுவனம் உருவாகி வருகிறது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு தயாரிப்பு நிறுவனம் வருஷத்துக்கு ஒரு படம் கொடுப்பது என்பது பெரிய விஷயமாக இருக்கிறது.

ஆனால் நம்ம இந்த செய்தியில் பார்க்கப் போகும் தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் 5 படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. சுதன் சுந்தரம் என்பவர் நடத்தி வரும் பேஷன் ஸ்டுடியோஸ் தான் அந்த புது நிறுவனம்.

இந்த வருஷம் 5 படங்களை தயாரிப்பதால் இந்த நிறுவனம் கவனத்தைப் பெற்று இருக்கிறது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

மொத்த கஜானாவையும் காலி செய்யும் தயாரிப்பாளர்

ஆரஞ்சு மிட்டாய், அனபெல் சேதுபதி, பென்குயின், பூமிகா, சட்டம், போத்தனூர் தபால் நிலையம் போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் தான் இது. சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா நடிப்பில் வெளியான பார்க்கிங் படத்தை இந்த நிறுவனம் தான் தயாரித்திருந்தது. படம் பெரிய அளவில் வெற்றியையும் அடைந்திருந்தது.

தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் சாட்டிலைட் உரிமை ஏற்கனவே விஜய் டிவியிடம் விற்கப்பட்டு விட்டது. அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

தளபதி விஜய் மேனேஜர் ஜெகதீஷின் ‘The Route”, லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த படத்தில் இணைந்திருக்கின்றன. அதேபோன்று நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த இரண்டு படங்களையும் இந்த நிறுவனம்தான் தயாரிக்க இருக்கிறது.

நடிகர் அருள்நிதி நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றிற்கும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இது மட்டும் இல்லாமல் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துக் கொண்டே இருக்கும் ராம் படமும் இந்த நிறுவனத்தின் பேனர் கீழ்தான் தயாரிக்கப்படுகிறது.

ஒரு படம் எடுத்து அதில் லாபம் பார்ப்பது என்பது பெரிய விஷயமாக இப்போது மாறிவிட்டது. அப்படி இருக்கும் பட்சத்தில் கவலையே இல்லாமல் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் அடுத்தடுத்து முதலீடு செய்து வருவது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending News