புதன்கிழமை, ஜனவரி 22, 2025

18 வருஷத்துக்கு முன்னாடியே 1000 கோடி வசூல் செய்த முதல் படம்.. அப்படி என்னதான் அதுல இருக்கு

சமீப காலமாக படங்கள் கோடிகளில் வசூல் சாதனை படைப்பது என்பது சாதாரணமான விஷயமாகிவிட்டது. அதிலும் கோடிகளில் முதலீடு செய்து எடுக்கப்படும் பான் இந்தியா படங்கள் முதலீட்டை விட பல மடங்கு வசூல் வேட்டை நடத்தி வருகிறது. முன்பு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடிகளில் வசூல் என்பது சினிமா துறையில் சுலபமான காரியம் இல்லை.

இப்படி இருக்க 18 வருடத்திற்கு முன்பே ஒரு படம் 1000 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது தெரியுமா? இன்றளவும் இது ஒரு முக்கியமான உலக படமாக பார்க்கபடுகிறது. சினிமா ஆர்வலர்களின் Favorite ஆகவும் இந்த படம் உள்ளது. மாயன் நாகரீகத்தை தழுவி எடுக்கபட்ட இந்த படம், சுவாரசியமான கதையம்சத்தை கொண்டது.

இந்த படம், 2006 ஆம் ஆண்டு இந்தியா உட்பட உலக நாடுகளில் வெளியாகி பிரம்மிக்க வைக்கும் வசூல் சாதனை படைத்தது. ஆஸ்கர் விருதுகளின் 3 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் படம், ஒவ்வொரு திரைப்பட ஆர்வலரும் பார்க்க வேண்டிய படம். இப்படம் திரையுலக பிரியர்களுக்கு மட்டுமின்றி வரலாறு படிப்பவர்களுக்கும் ஒரு குறிப்பேடாகவே பார்க்கப்படுகிறது. எத்தனை படங்கள் வந்தாலும் இந்த படத்திற்கு நிகராக வர முடியாது என்று சவால் விடும் அளவிற்கு ஒரு அற்புதமான படைப்பாக இது உள்ளது.

இந்தப் படத்தின் பெயர் .’அபோகாலிப்டோ’ படத்தில் ரூடி யங் பிளட் முக்கிய வேடத்தில் நடித்தார். இது அவருக்கு இரண்டாவது படம். இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான முதல் அமெரிக்க கலை விருதை வென்றார். ரூடி தனது 15 வருட வாழ்க்கையில் 8 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார்.

2006 டிசம்பரில் வெளியிடப்பட்ட இந்த ஹாலிவுட் படம் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டது. ஆட்சியாளர் மக்களை ஒடுக்கிய மாயன் நாகரிக காலத்திற்கு இது நம்மை அழைத்துச் செல்கிறது. பழங்குடி மக்களின் வாழ்க்கையை அழகான கதையாக கோர்வையாக அனைவருக்கு புரியும் படி கதை சொல்லி இருப்பார் இயக்குனர்.

இந்த பிரம்மாண்ட படத்தின் பட்ஜெட் 40 மில்லியன் டாலர்கள். அதாவது தற்போது ரூ.334 கோடியாக உள்ளது. இப்படம் சூப்பர் ஹிட்டானது மற்றும் 120.7 மில்லியன் டாலர்களை வசூலித்தது. அதாவது இப்போது ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல். தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் படத்தைப் பார்க்கலாம். இந்த படம் தான் 18 வருடத்திற்கு முன்பே 1000 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

Trending News