ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

குடும்பத்தை பற்றிய கேவலமான பதிவு.. கோபத்தில் நீலிமா செய்த தரமான சம்பவம்

சின்னத்திரையோ, பெரிய திரையோ ஒருவர் பிரபலமாகிவிட்டாலே அவரை சுற்றி பல சர்ச்சைகள் கிளம்புவது இப்போது சாதாரணமாகிவிட்டது. அதிலும் நடிக்க வரும் பெண்களைப் பற்றிய கருத்து ஒவ்வொருவருக்கும் மாறுபட்டுக் கொண்டுதான் இருக்கிறது. முன்பெல்லாம் நடிகைகளுக்கு கிடைத்த மரியாதை இப்போது கிடைப்பது கிடையாது.

சோசியல் மீடியா பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் நடிகைகள் பல விமர்சனங்களை சந்தித்து கொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில் வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை நீலிமா ராணி தற்போது ஒரு மோசமான அனுபவத்தை சந்தித்து இருக்கிறார். எப்போதுமே தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோக்கள், வீடியோக்கள் என பதிவிடுவது வழக்கம்.

Also Read: நிறைமாத வயிற்றுடன் தாமரையின் மீது நீலிமா.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கும் இவர் அது குறித்த போட்டோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் புடவை, மாடர்ன் டிரஸ் என விதவிதமான உடைகளை அணிந்தும் இவர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அதற்கு ரசிகர்கள் தரப்பிலிருந்து பாராட்டும் விதமாக பல கமெண்ட்டுகள் வந்து கொண்டிருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க அவரை தரக்குறைவாக பேசும் விதமாகவும் சிலர் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். அதில் நீலிமாவின் குடும்பத்தை பற்றியும் மோசமான கமெண்ட் வந்திருக்கிறது. இதனால் கொந்தளித்த நீலிமா சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் பிளாக் செய்துவிட்டார். அது மட்டுமல்லாமல் அவர்கள் யார் என்பதையும் ஒரு வீடியோவாக வெளியிட்டு அவர்களை நோஸ்கட் செய்திருக்கிறார்.

Also Read: நீலிமாவின் படுமோசமான படுக்கையறை வீடியோ இணையத்தில் லீக்.. என்ன சிம்ரன் இதெல்லாம்!

மேலும் என்னைச் சுற்றி இவ்வளவு மோசமான நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் நான் கண்டுகொள்ள போவதில்லை. இப்போது அவர்களை நான் பிளாக் செய்து விட்டேன். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த அறிக்கைக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இவர் மட்டுமல்லாமல் சின்ன திரையில் நடிக்கும் பல நடிகைகளும் இது போன்ற மோசமான அனுபவங்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் பலர் இதற்கு பெரிய அளவில் ரியாக்ட் செய்வதில்லை. சில தைரியமான நடிகைகள் மட்டுமே இதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர். அந்த வகையில் நீலிமாவின் இந்த செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

Also Read: குடிப்பீங்களா என கேட்ட ரசிகர்.. தமிழ் நாடு திரும்பி பார்க்கும் அளவிற்கு பதிலளித்த நீலிமாராணி

Trending News