ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

செல்பி சிவகுமாரின் அடுத்த அநாகரிகமான செயல்.. பொது இடத்தில் காத்தோடு போன சூர்யாவின் மானம்

Actor Sivakumar: எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் சபை நாகரிகம், தன்னடக்கம், மரியாதை நிச்சயம் இருக்க வேண்டும். அதுவும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் கவனத்துடன் முன் வைக்க வேண்டும். ஆனால் நடிகர் சிவகுமார் அதை பின்பற்றுவதே கிடையாது.

மேடைக்கு மேடை நன்னடத்தைப் பற்றி கிளாஸ் எடுக்கும் இவர் செய்திருக்கும் ஒரு விஷயம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது இவர் காரைக்குடியில் நடைபெற்ற பழ கருப்பையாவின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது நடந்து கொண்ட முறைதான் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

அந்த விழா மேடையில் அவர் பேசிவிட்டு கீழே இறங்கி செல்லும்போது வயதான பெரியவர் ஒருவர் அவருக்கு சால்வை அணிவிக்க முன்வருகிறார். ஆனால் சிவகுமார் அதை ஏற்காததோடு அவர் கையில் இருந்த சால்வையை பிடுங்கி எறிந்து விட்டு செல்கிறார். அந்த காட்சி தான் தற்போது மீடியாவில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

Also read: 7 கோடி நஷ்டத்திற்கு வந்த விடிவுகாலம்.. சைக்கோ இயக்குனருக்கு அப்பாவை தூது அனுப்பிய சூர்யா

பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் அநாகரீகமாக பொது இடத்தில் அதை தூக்கி எறிந்தது நிச்சயம் யாரும் எதிர்பாராதது தான். ஏற்கனவே ஒருமுறை செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை இவர் தட்டிவிட்டது பூதாகரமாக வெடித்தது.

அதை அடுத்து இப்போது சால்வை விஷயத்திலும் அவர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இதை தான் தற்போது நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் மரியாதை, ஒழுக்கம் பற்றி கிளாஸ் எடுக்கும் நீங்கள் மற்றவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் என சிவகுமாரை ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

Also read: 2 வருஷத்துக்கு இந்த பக்கமே வரக்கூடாதுன்னு எஸ்.ஜே சூர்யா போடும் ஆர்டர்.. கைவசம் இவ்வளவு படங்களா.!

Trending News