வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யின் அரசியலுக்கு புதிதாக கிளம்பிய பூகம்பம்.. ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் தளபதி

Actor Vijay: சினிமாவை பொருத்தவரை இரண்டு நடிகர்களுக்கு இடையே போட்டி, காலம் காலமாக நிலவிக் கொண்டே வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய அளவில் தலைவிரித்து ஆடியது. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் இவர்களின் பிரச்சினை ஓய்ந்து அனைத்தும் காணாமல் போய்விட்டது.

ஆனால் அதற்கு பதிலாக விஜய், ரஜினி பிரச்சினை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தற்போது சினிமாவில் பேசும் பொருளாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு இவர்களை வைத்து நிறைய பிரச்சனைகள் நாளுக்கு நாள் உருவாகிக்கொண்டே வருகிறது. இதனால் செம கடுப்பில் விஜய் இருக்கிறார்.

Also read: புகழ் போதையில் விஜய்யின் அப்பாவை மட்டம் தட்டி பேசிய குணசேகரன்.. மண்டையில் ஒரு கொட்டு வைத்து அறிவுரை கூறிய விவாகரத்து நடிகர்

அதற்கு காரணம் கட்சி ஆரம்பிக்கும் நேரத்தில் இந்த மாதிரி எல்லாம் பிரச்சனை வந்தால் பெயர் கெட்டுவிடும். அது அரசியல் வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது என்று ஏற்கனவே இவருடைய ரசிகர்களுக்கு கூறி வந்திருக்கிறார். ஆனால் அவர்கள் யாரும் இதை கேட்கவில்லை என்பது போல் தெரிகிறது.

இதனால் விஜய், இவருடைய மக்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் அனைவரிடமும் இனிமேல் எந்த நடிகர்களையோ அல்லது அரசியல்வாதிகளையும் தவறாக பேசக்கூடாது. அதே மாதிரி வலைதளங்களில் பதிவிட கூடாது. அப்படி பதிவிட்டால் அவர்கள் மக்கள் இயக்கம் மன்றத்திலிருந்து நீக்கப்படுவார்கள் அல்லது வேறு மாதிரியான எச்சரிக்கை கொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

Also read: 500 கோடி வசூலித்தாலும், அது சாராயம் வித்ததுக்கு சமம்.. ரஜினி, விஜய்யை கடுமையாக விமர்சித்த இயக்குனர்

இப்படி தொடர்ந்து போனால் அரசியலுக்கு இதுவே பிரச்சனைக்கு ஆணிவேராக அமைந்து விடும். அதனால் இப்பவே இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும் என்று அனைவரிடமும் ரொம்பவே கண்டிப்புடன் பேச இருக்கிறார். அந்த வகையில் மக்கள் இயக்க கூட்டத்தை கூட்டி அனைவருக்கும் கூடிய விரைவில் கட்டளையிட இருக்கிறார்.

இந்த பிரச்சனையை சரி செய்தால் மட்டுமே அரசியலுக்கு எதிராக திரும்பும் பூகம்பத்தை நிறுத்த முடியும் என்பதற்காக அதிரடியாக விஜய் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் லியோ ஆடியோ லான்ச் விழாவிலும் தேவை இல்லாமல் வார்த்தைகளை விடக்கூடாது என்பதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். ஏனென்றால் அதுவும் இவரது அரசியல் வாழ்க்கைக்கு எதிராக திரும்பிவிடும் என்ற பயத்தில் தான். இப்படி அரசியலை நினைத்து ஒவ்வொரு விஷயங்களையும் கண்ணும் கருத்துமாக பார்த்து செய்து வருகிறார்.

Also read: லிப்லாக், படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டும் பிக் பாஸ் ஜோடி.. எல்லாமே விஜய் அப்பா SAC போட்ட விதை

Trending News