Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

பிக்பாஸ் முத்துக்குமரனுக்கு வந்த புதிய சிக்கல்.. தலைமறைவா? காவல்துறை விசாரணையால் பரபரப்பு!

பிக்பாஸ் முத்துக்குமரனுக்கு வந்த புதிய சிக்கல்.. தலைமறைவா? காவல்துறை விசாரணையால் பரபரப்பு!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சையால் பெரும் பரபரப்பில் சிக்கியுள்ளார்.சமூக வலைதளப் பிரபலமான வாஹிதா அக்தர்,முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து நெருக்கமாகப் பழகியதாகவும்,பின்னர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.


இந்த விவகாரம் பெரிதாகப் பேசப்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது இருவரும் இணைந்து இருக்கும் வீடியோ.வாஹிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அந்த வீடியோவில்,முத்துக்குமரனும் அவரும் நெருக்கமாகப் பழகும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.அதில் முத்துக்குமரன் வாஹிதாவிடம் தனக்குப் பிடித்திருப்பதாகப் பேசும் காட்சிகளும் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையிலான உறவு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன.


இதற்கிடையே,திருமண வாக்குறுதி அளித்து தன்னை ஏமாற்றியதாகக் கூறி வாஹிதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதன் அடிப்படையில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முத்துக்குமரன் மீது BNS சட்டப்பிரிவு 69-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறுபுறம், இருவருக்கும் இடையே காதல் உறவு கிடையாது என்றும், தாங்கள் நண்பர்களாக மட்டுமே பழகியதாகவும் முத்துக்குமரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,தன்னுடன் இருந்த உரையாடல்கள் மற்றும் வீடியோக்கள் தவறாகச் சித்தரிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற முத்துக்குமரனுக்கு இந்த விவகாரம் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காவல்துறை விசாரணை நடைபெற உள்ள நிலையில்,இருதரப்பினரின் விளக்கங்களும் வெளிவந்த பிறகே இந்த சர்ச்சையின் முழு பின்னணி தெரியவரும்.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.