Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் சில சீரியல்கள் மக்களின் பேவரைட் சீரியலாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வருடம் ஆரம்பித்த சிறகடிக்கும் ஆசை சீரியல் கிட்டத்தட்ட 800 எபிசோடு தாண்டிய நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் அதிகமான புள்ளிகளை பெற்ற முதல் இடத்தில் இருக்கிறது.
ஆனால் தற்போது ரோகிணி பற்றிய விஷயங்கள் வெளியே வராமல் சொதப்புவதால் இதற்கு கொஞ்சம் நெகட்டிவ் கமெண்ட்கள் வர ஆரம்பித்துவிட்டது. இதனால் மற்ற சீரியல்களை பார்க்க ஆரம்பித்த மக்கள் தற்போது புதுசாக வந்த இன்னொரு சீரியலுக்கு அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஆப்பு வைக்கும் விதமாக வந்த புது சீரியல் மக்களை கவர்ந்து விட்டது.
அதாவது ஜனவரி மாதம் 27ஆம் தேதி ஆரம்பித்த அய்யனார் துணை என்ற சீரியல் தான் தற்போது விஜய் டிவியில் உருப்படியாக போகின்ற ஒரு சீரியலாக மக்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள். அந்த அளவிற்கு அதில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவர்களுடைய கேரக்டரை ரசிக்கும்படி கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக மதுமிதா என்கிற நிலா கதாபாத்திரம் மக்களை கவர்ந்து விட்டது.
இவரைத் தொடர்ந்து சோழன் நடிப்பு எதார்த்தமாகவும், நிலாவுக்கு உதவி பண்ணும் வகையில் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் ரசிக்கும் படியாக இருக்கிறது. அடுத்ததாக சேரன் பாண்டியன் பல்லவன் என அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக இருக்கிறது என்று தொடர்ந்து மக்கள் இந்த சீரியலை விரும்பி பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.
மேலும் எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் இருந்து ஜனனி வெளியேறினாலும் இரண்டாவது வாய்ப்பாக கிடைத்த மதுமிதாவிற்கு வெற்றி நிச்சயம் என்பதற்கு ஏற்ற மாதிரி இந்த அய்யனார் துணை என்கிற சீரியலில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் சிறகடிக்கும் ஆசை சீரியலை பார்த்து டென்ஷன் ஆகி புலம்புவதை விட்டு அனைவரும் அய்யனார் துணை சீரியலை பார்த்தால் கலகலப்பாக இருக்கும் என்று மக்கள் அவர்களுடைய கமெண்ட்ஸை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இன்னும் ஒரு சில வாரங்களில் டிஆர்பி ரேட்டிங்கில் சிறகடிக்கும் ஆசை சீரியலுக்கு ஆப்பு வைக்கும் விதமாக அய்யனார் துணை என்கிற சீரியல் அதிக புள்ளிகளை பெற்றுவிடும். தற்போது வரை இந்த ஒரு சீரியல் தான் பெஸ்ட் என்கிற மாதிரி பெயர் வாங்கி வருகிறது.