திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சொதப்பும் கோமாளிகள், விவரம் புரியாமல் மாட்டி கொண்ட மாதம்பட்டி.. நடுக்கடலில் தத்தளிக்கும் CWC-5

Cook with comali 5: விஜய் டிவியில் ஒரு காலத்தில் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்த ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. சமையலில் காமெடியை புகுத்தி வேற லெவலில் டிஆர்பிஐ அள்ளினார்கள். ஆனால் நிலைமை இப்போது தலைகீழாகி விட்டது.

கோமாளி நிகழ்ச்சியின் முதல் 2 சீசன்களுக்கு இருந்த வரவேற்பு மக்களிடையே இப்போது இல்லை. மூன்றாவது சீசன்னை ஆவரேஜ் லிஸ்டில் சேர்க்கலாம். நான்காவது சீசன் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டது என்று கூட சொல்லலாம்.

விஜய் டிவியிடம் இருக்கும் ஒரு பெரிய கெட்ட விஷயம் என்னவென்றால் அரைச்ச மாவையே அரைப்பது. ஒரு விஷயம் மக்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது என்றால், அதை திரும்பத் திரும்ப செய்து மக்களை வெறுக்க வைத்து விடும் அளவுக்கு பண்ணி விடுவார்கள்.

ஒரு காலத்தில் ராமர் காமெடியில் கலக்கி கொண்டு இருந்தார், அவரை திரும்பத் திரும்ப காமெடி பண்ண வைத்து அப்படியே டம்மி ஆக்கினார்கள். புகழ் எப்போதாவது லேடி கிட்ட வரும் பொழுது பார்ப்பதற்கு ஆசையாக இருக்கும்.

ஆனால் எல்லா நிகழ்ச்சியிலும் அவரை நாடி கட்டத்தில் வர வைத்து கொலையாக கொன்று விட்டார்கள். அப்படித்தான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியும். முதல் சீசனில் புகழ் ரம்யா பாண்டியனிடம் காதல் ட்ராக் ஓட்டியது பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

மீண்டும் இரண்டாவது சீசனில் பவித்ரா மற்றும் தர்ஷாவிடம் வழிவது கூட மக்களால் ரசிக்கப்பட்டது. அதை அப்படியே சிவாங்கியை செய்ய வைத்து ஓரளவுக்கு அது வெற்றியும் பெற்றது. ஆனால் தொடர்ந்து சமையல் ஷோவில் லவ் கண்டன்டு கொடுத்து பேர் வாங்கிவிடலாம் என கோமாளிகள் முயற்சி செய்வது பார்க்க சகிக்கவில்லை.

இரண்டாவது சீசனில் தமிழ் தெரியாமல் சுனிதா பாடுவது வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. ஆனால் சுனிதா இப்போ போற இடம் எல்லாம் தப்பு தப்பா பாட்டு பாடுவது பார்க்கவே வயித்தெரிச்சலா இருக்கு. அதிலும் இந்த சீசனில் கோடி அறிவு கொட்டுதே பாடலை அவர் பாடிய போது, யம்மா இன்னுமா உன்னை இந்த ஊரு நம்பிட்டு இருக்குதுன்னு சொல்ற மாதிரி தான் இருந்துச்சு.

எது தோசை கல்லு, எது ஆப்பை கல் என்று கூட தெரியாம இருந்த சிவாங்கி திடீரென்று போன சீசனில் குக் ஆனது எப்படிடா என்று இன்றுவரை ஆச்சரியப்பட வைக்கிறது. சிவாங்கி குக்கானதால நான் இனி கோமாளியாக இருக்க மாட்டேன்னு மணிமேகலை அடம்பிடித்து இருப்பாங்களோ என்று இப்பதான் சந்தேகம் வருது.

இந்த சீசனில் ஆன்கர் ஆக வந்து யாரையுமே பேச விடாம, தான் மட்டுமே பேசி ரொம்ப போர் அடிக்கிறார். நகைச்சுவை என்பது இயல்பாக இருக்கும் வரை முதல் இரண்டு சீசன்களும் மக்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் எப்போ குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காமெடி வாண்டடாக திணிக்கப்பட்டதோ அப்போவே அது தனித் தன்மையை இழந்து விட்டது.

விஜய் டிவியின் கடந்த நான்கு சீசன்களை நடத்தி வந்த மீடியா மேசன் நிறுவனம் தற்போது சன் டிவியுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். அவர்களுடைய கான்செப்ட்டை அப்படியே டாப் குக் டூப் புக் என்ற பெயரில் நிகழ்ச்சியை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

விஜய் டிவி ஐந்தாவது சீசனை ஆரம்பித்து இதுதான் கான்செப்ட் என்று காண்பித்த பிறகு, தன்னுடைய ப்ரோமோவை களம் இறக்கி இருக்கிறது சன் டிவி. வெங்கடேஷ் பட், KPY தீனா, மோனிஷா, ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியாளர் பரத் என கடந்த நான்கு சீசனில் கலந்து கொண்ட விஜய் டிவி நட்சத்திரங்கள் இப்போது இந்த நிகழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மவுசு குறைந்து வரும் நிலையில், சன் டிவி இப்படி ஒரு விஷயத்தை செய்து இருக்கிறது. மொத்தத்தில் இப்போதைக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி நம்பி இருப்பது மாதம்பட்டி ரங்கராஜை தான் என்று சொன்னால் மிகையல்ல. இரண்டு நிகழ்ச்சியில் எது வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News