புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்கப்பெண்ணில் அன்பு தான் அழகன் என தெரிந்து கொள்ளும் அந்த ஒரு நபர்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் மித்ரா

Singapenne: சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கப் போகிறது. மித்ராவை கம்பெனியில் இருந்து சஸ்பெண்ட் பண்ணியதால் அடுத்து என்ன திட்டம் போட்டு ஆனந்தியை கவுக்கலாம் என காத்துக் கொண்டிருக்கிறாள்.

அதே நேரத்தில் அன்பு தான் இது எல்லாத்திற்கும் காரணம் என்பதால் ஒரே நேரத்தில் அன்பு மற்றும் ஆனந்தியை கம்பெனியில் இருந்து வெளியேற்ற திட்டம் போடுகிறாள். அன்புவின் அப்பா திதிக்கு கம்பெனியில் இருக்கும் எல்லோரையும் வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தான் அன்பு.

அன்புவின் அம்மாவுக்கு ஆனந்தியுடன் மனஸ்தாபம் இருப்பதால் ஆனந்தி முதலில் அந்த விசேஷத்திற்கு வருவதாக இல்லை. எதேர்ச்சியாக அன்புவின் அம்மாவை ஆனந்தி ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றுகிறாள். இதனால் ஆனந்தி மீது இருந்த வெறுப்பு அன்புவின் அம்மாவுக்கு சரியானது போல் இன்றைய ப்ரோமோவில் காட்டப்படுகிறது.

அன்பு தான் அழகன் என தெரிந்து கொள்ளும் அந்த ஒரு நபர்

மேலும் அந்த திதிக்கு ஆனந்தியையும் வர சொல்கிறார். ஆனந்தி தன்னுடைய வீட்டிற்கு வந்தது அன்புக்கு பெரிய சர்ப்ரைஸ் ஆக இருக்கிறது. மேலும் ஆனந்தி இந்த வீட்டிற்கு மருமகளாகவும் வர வேண்டும் என அன்பு ஆசைப்படுகிறான்.

அதே நேரத்தில் தன்னுடைய வீட்டில் வைத்து அன்பு தான் அழகன் என்று தெரியப்படுத்த வேண்டும் என நினைக்கிறான். ஆனால் ஆனந்திக்கு முன்பே அன்பு தான் அழகன் என்பதை யாரோ கண்டுபிடித்து விடுவது போல் இன்றைய ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

ஆனந்தியை தவிர வேற யார் கண்டுபிடித்தாலும் அது அன்பு மற்றும் ஆனந்தியின் காதலுக்கு சிக்கலாக தான் அமையப் போகிறது. அந்த ஒரு நபர் யார் என்பதை இந்த வார எபிசோடில் பார்க்கலாம்.

சிங்கப்பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News