சிங்கப்பெண்ணில் மொத்த ஆட்டத்தையும் கலைத்த அந்த நபர்.. பத்ரகாளியாய் மாறிய ஆனந்தி!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோ வீடியோ சிங்க பெண்ணே சீரியல் நேயர்களின் உச்சகட்ட கோபத்தை சீண்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனந்திக்கு தெரியாமல் ஏற்பட்ட கர்ப்பத்தால் அவள் கஷ்டப்படக்கூடாது என அவளுடைய தோழிகள் அந்தக் கருவை கலைக்க மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். ஆனந்திக்கு இளநீரில் மருந்தும் கலந்து கொடுக்கப்படுகிறது. அதே இளநீர் கடையில் மற்றும் துளசி பேசிக் கொண்டிருப்பது போல் காட்டப்பட்டது.

மொத்த ஆட்டத்தையும் கலைத்த அந்த நபர்

இதனால் அன்பு தான் உள்ளே வந்து ஆனந்தியின் தோழிகளின் திட்டத்தை முறியடிக்கப் போகிறான் என்று தோன்றியது. ஆனால் அந்த மொத்த ஆட்டத்தையும் கலைத்திருப்பது ஹாஸ்டல் வார்டன்.

ஆனந்தி ஏற்கனவே இந்த கர்ப்பத்தால் படாத பாடு பட்டு கொண்டிருக்கிறாள். ஏதோ தவமாய் தவமிருந்து கருத்தரித்த குழந்தையை அவளுடைய தோழிகள் கலைக்க இருப்பது போல் ஆனந்தி மற்றும் வார்டனின் ரியாக்ஷன் இருக்கிறது.

இன்னும் கர்ப்பத்தை வெளியில் சொல்லாமல் எத்தனை எபிசோடுகள் அரைத்த மாவையே அரைக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

அப்படியே ஆனந்தி கர்ப்பமாக இருந்தால் அவளை தயவு செய்து மகேஷுடன் சேர்த்து வைத்துவிட்டு சீரியலை முடித்து விடுங்கள் என்பது தான் நேயர்களின் வேண்டுகோள். இதை புரிந்து கொள்ளாமல் இயக்குனர் நாளுக்கு நாள் கதையை சவ்வாய் இழுத்துக் கொண்டிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →