வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சொன்ன மாதிரி மகளா தத்தெடுத்துட்டாரோ? வெளியேறிய குயின்ஸியை முத்தமிட்டு ராபர்ட் மாஸ்டரின் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எப்போதுமே பிக் பாஸில் பல உறவுகள் உருவாகும். ஆனால் பிக் பாஸ் முடிந்த பிறகு வெளியில் இந்த உறவு அப்படியே தொடர்கிறதா என்பது சந்தேகம் தான்.

இந்நிலையில் பிக் பாஸில் அப்பா மகள் என்று முதலில் மலர்ந்தது சேரன், லாஸ்லியா இடையே தான். உண்மையான அப்பா, மகள் போலவே பாசத்தை கொட்டி தீர்த்தனர். அதேபோல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்ஸி இடையே அப்பா, மகள் போன்ற உறவு போய்க் கொண்டிருந்தது.

Also Read : டிஆர்பி-யில் சன் டிவி-யை சுக்கா போட்ட விஜய் டிவி.. பாக்யா, கண்ணம்மாவிற்கு இவ்வளவு மவுசா

இவர்கள் இருவருமே விளையாட்டை சரியாக விளையாடவில்லை என்றாலும் தங்களது உறவை மேம்படுத்திக் கொண்டு வந்தனர். ராபர்ட் மாஸ்டருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் மனைவி மற்றும் மகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஆகையால் குயின்ஸியை பார்க்கும் போது தன்னுடைய மகள் ஞாபகம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் தான் ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்ஸி இருவரும் அப்பா மகள் போல பழகி வந்தனர். இந்நிலையில் சென்ற வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய நிலையில் அதற்கு அடுத்த வாரமே குயின்ஸி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இந்நிலையில் வெளியே போன இவர்கள் சந்தித்துள்ளனர்.

Also Read : விவாகரத்து செய்ததை மறைத்த 4 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. முத்தி போன வயதிலும் பிளே பாயாக இருந்த ராபர்ட் மாஸ்டர்

ஒரு ஹோட்டலில் உணவு அருந்தும் போது குயின்ஸியை ராபர்ட் மாஸ்டர் முத்தமிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் சொன்னது போல ராபர்ட் மாஸ்டர் குயின்ஸியை தத்தெடுத்துட்டாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த உறவு இப்படியே கடைசி வரை பயணித்தால் சந்தோஷம் தான் என்றும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் யார் இரண்டு பேர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

queency-robert-master

Also Read : பிக் பாஸில் குயின்ஸி வாங்கிய சம்பளம்.. மிச்சர் சாப்பிட்டதற்கு இவ்வளவு சம்பளமா?

Trending News