வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜயகாந்தை கோமாளியாக்க நடந்த அரசியல் சதி.. இயல்பான குணத்தால் வென்ற கேப்டன்

Vijayakanth: கடந்த 28ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவின் காரணமாக உயிர் நீத்தார். அவருடைய இறப்புக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கண்ணீர் சிந்திய நிலையில் இப்போதும் அதிலிருந்து வெளிவர முடியாமல் அனைவரும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கேப்டன் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவருக்கு எதிராக நடந்த அரசியல் சூழ்ச்சியும் வேதனை தருவதாக இருக்கிறது. அதன்படி விஜயகாந்தை கோமாளியாக்க பல வேலைகள் நடந்திருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் அரசியலுக்கு வந்த வேகத்திலேயே அவர் மக்களிடம் பெற்ற செல்வாக்கு தான். அதனாலேயே சில கைக்கூலிகளை வைத்து அவரை கீழிறக்க பல அரசியல் சதிகள் நடந்தது. அதாவது கேப்டனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. ஆனால் அவர் அரசியலுக்கு வந்த பிறகு அந்த பழக்கத்தை முற்றிலுமாக விட்டுவிட்டார்.

Also read: விஜயகாந்த் குடும்பம் வைத்த கோரிக்கை.. ஒரே நாளில் செயல்படுத்தி காட்டிய முதல்வர் ஸ்டாலின்

ஆனாலும் அவரை மீடியாக்கள் குடிகாரர் ஆகவே சித்தரித்தது. இதற்கு முக்கிய காரணம் அவருடைய உடல் நல பிரச்சனை தான். சரியாக பேச முடியாமல், மெதுவாக நடந்து வரும் அவரை குடிகாரர் என்று மீடியாக்கள் காட்டினர். சோசியல் மீடியாவிலும் அவர் ஒரு ட்ரோல் மெட்டீரியலாக மாறினார்.

ஆனால் இதற்காக கேப்டன் ஒரு நாளும் கோபப்பட்டது கிடையாது. என்னுடைய உடல்நல பிரச்சனை அவர்களுக்கு தெரியாது. அதனால்தான் கிண்டல் செய்கிறார்கள் என்று இயல்பாக கூறுவாராம். அதேபோல் அவர் கோபக்காரராக இருந்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும்.

ஆனாலும் அவரை மீடியாக்கள் தவறாக காட்டினார்கள். ஒரு விதத்தில் அவருடைய சரிவுக்கு மீடியாக்களும் காரணம். இருந்தாலும் தன்னை நோக்கி வந்த சூழ்ச்சிகளையும் இயல்பான குணத்தினால் அவர் வென்றார். இறுதி ஊர்வலத்தில் கட்டுக்கடங்காமல் வந்த மக்களின் கூட்டமே அதற்கு சாட்சி.

Also read: கேப்டனை துச்சமாக நினைத்த தளபதி விஜய்.. உண்மையை வெட்ட வெளிச்சமாகிய எஸ்ஏசி

Trending News