ஒரு தலை காதலால் தற்கொலை முயற்சி செய்த ஹீரோயின்.. இந்த நடிகருக்கு இப்படி ஒரு போட்டியா!

Gossip News: எண்பது மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்த நடிகை அவர். அந்த காலகட்டத்தில் இருந்த அத்தனை டாப் ஹீரோக்களுடனும் ஜோடி போட்ட நடித்த இந்த ஹீரோயின் குடும்பப் பாங்கான கேரக்டராக இருந்தாலும் சரி, கவர்ச்சி ஆட்டமாக இருந்தாலும் சரி வந்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தி சினிமாவில் சம்பாதித்து விட்டார்.

அந்த காலகட்டத்தில் ரொம்பவும் தைரியமாக இருந்த ஹீரோயின் என்று கூட இவரை பலரும் பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள். மனதில் பட்டதை தெளிவாகப் பேசக்கூடிய இந்த நடிகை, அவருடன் நடித்த நடிகர் ஒருவர் மீது காதல் வயப்பட்டு இருக்கிறார். இதை நடிகரிடம் பலமுறை தெரியப்படுத்தியும் அவர் இந்த காதலை ஏற்றுக் கொள்வதாய் இல்லை.

Also Read:கோழி குருடானாலும் கொழம்பு ருசி தான்.. அம்மா நடிகையை பதம் பார்த்த முரட்டு நடிகர்

பலவிதத்திலும் நடிகரின் மீதி இருந்த காதலை தெரியப்படுத்தி, அவரை ஒத்துக் கொள்ள வைக்க நடிகை எவ்வளவோ முயற்சி செய்திருக்கிறார். எதுவுமே கை கொடுக்காத நிலையில், தற்கொலை முயற்சி செய்து கூட நடிகரை பயமுறுத்தி இருக்கிறார். ஆனால் எதுவுமே வேலைக்காகவில்லை. கடைசி வரை அந்த நடிகர் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவே இல்லையாம்.

இதனால் தன் முடிவை மாற்றிக் கொண்ட நடிகை, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலும் ஆகிவிட்டார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர கேரக்டர்களிலும், தயாரிப்பாளராகவும் தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நடிகையின் காதல் கதை மற்றும் தற்கொலை முயற்சி பல வருடம் கழித்து இப்போது வெளியில் வந்திருக்கிறது.

Also Read:சைக்கோ போல் கடித்து பிராண்டிய காதலன்.. அந்தரங்க தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற நடிகை

அந்த நடிகை காதலித்த நடிகர் அந்த சமயத்தில் பயங்கர பிளே பாயாக இருந்தவர். 90ஸ் ஹீரோயின்கள் பலரும் அவருடன் நடிக்க போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். அவர் மீது காதல் வயப்பட்டு தங்களுக்குள் அடித்துக் கொண்ட நடிகைகளும் உண்டு. ஆனால் இந்த நடிகர் பழகும் வரை நன்றாக பழகி விட்டு அத்தனை பேரையுமே கழட்டி விட்டு விட்டார். நடிகையின் தீவிர காதலை அவர் ஏற்றுக் கொள்ளாததற்கு இதுவும் ஒரு காரணம்.