புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Vetrimaran – Pa Ranjith : ஜாதி என்ற பெயரில் சினிமாவை அழிக்கும் பா ரஞ்சித், வெற்றிமாறன்.. மேடையில் கொந்தளித்த பிரபலம்

சினிமாவில் வித்தியாசமான கதை களத்தில் மூலம் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் தான் வெற்றிமாறன். ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவருடைய படங்கள் எல்லாமே ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான நீதி கிடைக்கும் கதைக்களமாக தான் அமைந்திருக்கும்.

அதேபோல் பா ரஞ்சித்தும் தனது படங்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருந்து வருகிறார். அவர் மேடையில் பேசுவதும் சில சமயங்களில் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. பா ரஞ்சித் வழியில் தான் மாரி செல்வராஜூம் படங்களை எடுத்து வருகிறார்.

இந்த சூழலில் நடிகர் ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் சில இயக்குனர்களுக்கு ரஞ்சித் அழைப்பு விடுத்திருந்தார். அப்போது இந்த விழாவில் பேசிய பிரவீன் காந்தி ஆவேசமாக சில விஷயங்களை கூறியிருந்தார்.

வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித்தை விமர்சித்த பிரபலம்

பா ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் போன்ற சில இயக்குனர்கள் சினிமாவில் வளர்ச்சி பெற்ற பிறகு தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது. ஜாதி என்ற பெயரில் சினிமாவை அழித்து வருகிறார்கள். அதாவது சினிமாவில் ஜாதியை பற்றியே பேசக்கூடாது என்று பிரவீன் காந்தி கூறியிருந்தார்.

மேலும் நடிகர் ரஞ்சித் இந்த விழாவிற்கு அழைத்தபோது நான் வந்ததற்கு காரணம் இருக்கிறது. அதாவது கோயமுத்தூரில் ஹாப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்வில் சகோதரர் மற்றும் சகோதரிகள் சீரழிந்து கொண்டிருந்தனர். அப்போது முதலில் குரல் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது ரஞ்சித் தான்.

இப்போது கவுண்டம்பாளையம் படத்திலும் ஜாதியை பற்றி பேசி இருந்தாலும் தேவையான கருத்தை மட்டும் தான் ரஞ்சித் சொல்லி இருப்பார். இந்த படம் நிச்சயம் மக்களை சென்றடைந்து வெற்றி பெறும் என்று பிரவீன் கூறியிருந்தார். ஆனால் பா ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரை பற்றி கொந்தளித்து பேசிய பிரவீன் காந்தி வீடியோ இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending News