வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இன்று வரை பேசப்படும் எம்ஜிஆர்-எம் ஆர் ராதா துப்பாக்கி சூடு வழக்கு.. மொத்த பிரச்சனைக்கும் காரணம் இந்த நடிகை தான்

MGR – MR Radha: தமிழக அரசியல் மற்றும் சினிமாவில் இன்று வரை மறக்க முடியாத சம்பவம் என்றால் அது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை நடிக வேள் எம் ஆர் ராதா துப்பாக்கியால் சுட்டது தான். குண்டடிப்பட்ட இருவரும் மருத்துவமனையில் ஒரே அறையில் சிகிச்சை பெற்றது, போலீஸ் கேஸ் ஆகி வழக்கு நீதிமன்றம் வரை சென்றது, அதன் பின்னர் இருவரும் தங்களுக்குள் பேசி சமாதானமானது என எல்லாமே தெரிந்த கதை தான்.

நடந்த சம்பவங்கள் அத்தனையும் தெரிந்தாலுமே இந்தப் பிரச்சனைக்கான காரணம் என்ன என்பது இதுவரை புரியாத புதிராகத்தான் இருக்கிறது. ஆளுக்கு ஒருவர் தங்களுக்கு தெரிந்த காரணத்தை இன்று வரை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். எம்ஜிஆர் தரப்பில் இருந்து எம்.ஆர். ராதாவிடம் பணம் வாங்கப்பட்டதாகவும் அதை திருப்பிக் கொடுக்காததால் தான் சண்டை வந்து சுட்டுக் கொண்டதாகவும் இதுவரை சிலர் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

Also Read:எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்ட எம் ஆர் ராதா.. காரணத்தைக் கேட்டு மிரண்டு போன கோலிவுட்

ஆனால் உண்மையில் இவர்கள் இருவரது பிரச்சனைக்கு காரணமாக இருந்தது பிரபல நடிகை ஒருவர் என்று தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நடிகைக்கும் அவர்களுக்கும் இடையேயான பிரச்சனை என்ன என்பது தெளிவாக சொல்லப்படவில்லை என்றாலும் கொலை முயற்சி அளவுக்கு சென்றதற்கு காரணம் இவர்தான் என்பது மட்டும் உறுதியாக சொல்லப்படுகிறது.

பைங்கிளி என தமிழ் சினிமா ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட கூடியவர் தான் அந்த நடிகை. தன் கண்களாலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய இந்த நடிகை கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றவர். இவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் எம் ஆர் ராதா இருவருடனுமே நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

Also Read:எம் ஆர் ராதா எம்ஜிஆரை இதுக்கு தான் சுட்டாரா.. உண்மையை உடைத்த ராதாரவி

எம்ஜிஆரின் துப்பாக்கி சூட்டிற்கு முன்பு வரை அவருடன் மொத்தம் 24 படங்களில் நடித்த இந்த நடிகை அந்த சம்பவத்திற்கு பிறகு ஒரு படத்தில் கூட அவருடன் இணைந்து நடிக்கவில்லை. மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட எம்ஜிஆர் மற்றும் எம் ஆர் ராதா இருவருமே தற்போது உயிரோடு இல்லை. உயிரோடு இருக்கும் வரையில் கூட இவர்கள் இருவரும் உண்மை காரணத்தை வெளியில் சொல்லவில்லை. அதனால் தான் இத்தனை வருடம் இந்த நடிகையின் பெயர் இந்த பிரச்சனையில் சிக்காமல் இருந்திருக்கிறது.

வழக்கு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் போதே வாய் திறக்காத இந்த நடிகை, தற்போது 85 வயதில் கண்டிப்பாக இதைப் பற்றி கேட்டாலும் வெளிப்படையாக பேசப்போவதில்லை. எனவே எம்ஜிஆர் மற்றும் எம் ஆர் ராதா இருவருக்குள்ளான இந்த துப்பாக்கி சண்டை என்பதற்கான காரணம் கடைசிவரை வெளி வராத ரகசியமாகவே இருந்து விடப் போகிறது.

Also Read:இப்பவும் நடிப்புக்கு நான் தான் ராஜா என நிரூபித்த எம் ஆர் ராதா.. நடிப்பின் அசுரன் என நிரூபித்த 5 படங்கள்

Trending News