திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஆண் ஷகிலா என குறிப்பிட்ட பத்திரிக்கை.. வெறிக்கொண்டு திறமையை நிரூபித்த நடிப்பு அசுரன்

தற்போது சினிமாவில் எட்டமுடியாத உயரத்தில் இருக்கும் ஒரு நடிகரை ஆரம்பத்தில் பிரபல பத்திரிக்கைகளில் ஆண் ஷகிலா என்று குறிப்பிட்டிருந்தனர். அதாவது அந்த நடிகர் ஆரம்ப காலங்கள் நடித்த படங்களில் அதிக கவர்ச்சி காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனால் குடும்ப ஆடியன்ஸ் அவரது படத்தைப் பார்க்க மறுத்தனர்.

மேலும் வீட்டில் தொலைக்காட்சியில் அவரது படங்கள் ஓடினாலும் உடனே சேனலை மாற்றினார்கள். ஆனால் தற்போது அந்த நடிகரின் படத்தை பார்க்க பல லட்சக்கணக்கான பேர் காத்திருக்கின்றனர். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை தனுஷ் தான். தனது அண்ணன் செல்வராகவனுடன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தனுஷ்.

முதல் படத்திலேயே இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என பலரும் விமர்சித்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு லாபத்தை பெற்றுத் தந்தது. இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அடல்ட் மூவியாக இருந்தது. அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தனுஷ் நடித்து இருந்தார்.

அதன்பின்பு தனது தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்த ட்ரீம்ஸ் படத்தில் கவர்ச்சியான காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அது ஒரு கனா காலம் படத்திலும் சில மோசமான காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்பு புதுப்பேட்டை படத்திலும் சோனியா அகர்வால் மற்றும் சினேகாவுடன் தனுஷுக்கு சில நெருக்கமான காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.

குழந்தைகள் பார்க்க முடியாத அளவிற்கு தனுஷ் படங்களில் தொடர்ந்து இதுபோன்ற காட்சிகள் வைக்கப்பட்டிருந்து. அந்த காலகட்டத்தில் கவர்ச்சி நடிகை என்றால் ஷகிலா தான் பேமஸ் ஆக இருந்தார். இதனால் அப்போது ஆண் ஷகிலா என்று தனுஷை குறிப்பிட்டு பத்திரிக்கைகளில் எழுதப்பட்டிருந்தது. அதன் பின்பு தனது நடிப்பை பறைசாற்றும் விதமாக பல வெற்றி படங்களை தனுஷ் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஆடுகளம், அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். மேலும் தனுஷ் படம் வெளியாகிறது என்றாலே குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு படையெடுக்கின்றனர். தன்னை விமர்சித்த பத்திரிக்கையை தன்னுடைய நடிப்பை பற்றி புகழ்ந்து எழுத வைத்துள்ளார் நடிப்பு அசுரன் தனுஷ். அது மட்டுமல்லாமல் அவருடைய வளர்ச்சியை தமிழ் சினிமாவே அண்ணாந்து பார்த்து உள்ளது.

Trending News