Lyca Productions: பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தன்னுடைய அஸ்தம காலத்தில் இருப்பதாக வலை பேச்சு பிஸ்மி தெரிவித்திருக்கிறார். பொதுவாக பெரிய ஹீரோக்களின் செல்வாக்கை காப்பாற்றுவதற்காக அவர்களுடைய படங்களில் ரிசல்ட்டை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
நல்ல விமர்சனம் வராத நிறைய படங்கள் மூன்று இலக்க எண்களில் கோடிகளில் வசூலை செய்து விட்டதாக கூட பாக்ஸ் ஆபீஸ் ரிசல்ட் காட்டுகிறார்கள். அப்படி பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து கோடிக்கணக்கில் லாபம் பெற்ற நிறுவனம் தற்போது பொருளாதார சிக்கலில் கடையை இழுத்து மூட தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் லைக்கா நிறுவனம் தான் சிக்கலில் சிக்கியிருப்பதாக பிஸ்மி சொல்லி இருக்கிறார். அவர் தன்னுடைய பேட்டியில் இந்த விஷயத்தை சொன்னதும் ஒரு பக்கம் இந்த நடிகர்களின் விசுவாசிகள் லைக்காவின் நஷ்டத்திற்கு யார் காரணம் என பட்டிமன்றம் வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அடித்து கொள்ளும் ரஜினி, கமல், அஜித் விசுவாசிகள்
இதில் முதலில் சிக்கி இருப்பது சூப்பர் ஸ்டார் தான். லைக்கா நிறுவனம் தொடர்ந்து ரஜினி படங்களை தயாரித்து வருகிறது. இதன் தயாரிப்பில் வெளியான லால் சலாம் படம் பெரிய தோல்வியை அடைந்தது. இதனால்தான் ரஜினி மீது இந்த பழி வந்திருக்கிறது.
மற்றொரு தலை உருளுவது கமலஹாசன் தான். 2019 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் லைக்கா நிறுவனம் இந்தியன் 2 எடுக்க ஆரம்பித்தது. இன்று வரை இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. மேலும் எக்கச்சக்க ஃபுட்டேஜ்கள் இருப்பதால் அதை அப்படியே இந்தியன் 3 ஆக மாற்றி விட பிளான் நடந்து கொண்டிருக்கிறது. கமலின் இந்த படத்தால்தான் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக சினிமா ரசிகர்கள் அவரை சாடுகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் தற்போது லைக்கா நிறுவனம் அஜித்தின் விடாமுயற்சியை தயாரித்துக் கொண்டிருப்பதால் இந்த நஷ்டத்திற்கு அஜித் தான் காரணம் என பேசப்படுகிறது. போதாத குறைக்கு லைக்கா நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தால் ஜேசன் சஞ்சய் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என விஜய் ரசிகர்கள் குமருகிறார்கள்.
தளபதி மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக இருப்பது லைக்காவின் தயாரிப்பில் தான். அதனால் தான் விஜய் விசுவாசிகளுக்கு தற்போது கவலை தொற்றிக் கொண்டது.
லைக்கா செய்யும் அக்கப்போர்
- லைக்காவிடம் சிக்கிக்கொண்ட அஜித், கமல்
- லைக்காவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ரஜினிகாந்த்
- விடா முயற்சிய ஆண்டவன் தான் காப்பாத்தணும்