வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அஜித்துக்கு ஞானவேல் ராஜாவே பரவால்ல.. பணத்தை கொடுத்து ஏமாந்த தயாரிப்பாளர்

Actor Ajith: இப்போது சோசியல் மீடியா முழுவதும் ஞானவேல் ராஜா, அமீர் பிரச்சனை தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்த ஞானவேல் ராஜா இப்போது வருத்தம் தெரிவிக்கும் அளவுக்கு வந்திருக்கிறார்.

அந்த அளவுக்கு அமீருக்கான ஆதரவு ஒவ்வொரு நாளும் பெருகி கொண்டிருக்கிறது. இந்த சூழலில் செவன்த் சேனல் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித் குறித்து ஒரு விஷயத்தை கூறி பகீர் கிளப்பி இருக்கிறார். அதாவது 95 காலகட்டத்தில் அஜித் இவரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாக பெற்றிருக்கிறார்.

Also read: கண்ட நாயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம்.. தயாரிப்பாளரை கோபப்பட்டு திட்டிய அஜித்..!

அப்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த அவர் தன் அம்மா அப்பாவை வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி இருந்தாராம். ஆனால் அதன் பிறகு அவர் அதை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக மாணிக்கம் நாராயணன் சில மாதங்களுக்கு முன்பே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தற்போது மீண்டும் அந்தப் பிரச்சனையை பற்றி பேசி இருக்கும் அவர் ஞானவேல் ராஜா செய்றது தப்புனா அஜித்தும் தப்பானவர் தான். அவர் மனுஷனே கிடையாது. எனக்கு தர வேண்டிய பணத்தை அவர் இப்ப வரைக்கும் கொடுக்கல. இத பத்தி சொன்னா நான் புலம்பறேன்னு சொல்றாங்க என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Also read: அடுத்தடுத்து 3 வருஷத்துக்கு ஐந்து இயக்குனர்களை லாக் செய்த அஜித்.. தனுஷ் காத்திருக்க ஏகே செய்த வேலை

மேலும் வேட்டையாடு விளையாடு வெளிவந்த சமயத்தில் ஞானவேல் ராஜா அந்த படம் எல்லாம் ரிலீஸ் ஆகாது என தெனாவட்டாக கமெண்ட் அடித்தாராம். அதை பற்றியும் குறிப்பிட்டுள்ள தயாரிப்பாளர் இங்கே முக்கால்வாசி பேரு இப்படி ஏமாத்துறவங்க தான் என்று கூறியுள்ளார்.

Trending News