புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஒரு தயாரிப்பாளரா இந்த 5 படங்களால் தோற்றுப் போன சன் பிக்சர்ஸ்.. ரெண்டு அட்ட ப்ளாப் கொடுத்த விஜய்

Sun Pictures Distributer Movies: சில படங்களின் வெற்றி தோல்வியை பொறுத்து அப்படத்தின் தயாரிப்பாளருக்கு லாபம் நஷ்டம் கிடைக்கும். அந்த வகையில் எதிர்பாராத தோல்வி படங்களால் இப்படத்தை நம்பிய தயாரிப்பாளருக்கும் மற்றும் விநியோகம் செய்தவர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அப்படி சன் பிக்சர்ஸ் டிஸ்ட்ரிபியூட் பண்ணிய படங்களில் தோல்வியை பார்த்த படங்களை பற்றி பார்க்கலாம்.

தில்லாலங்கடி: மோகன் ராஜா இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு தில்லாலங்கடி திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெயம் ரவி, தமன்னா, ஷாம், பிரபு, வடிவேலு, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை வைத்து எடுக்கப்பட்ட படம். அதுவும் ஜெயம் ரவி திரில்லிங்காக ஏதாவது பண்ண வேண்டும் என்று பல சாகசங்களை எடுக்க முயற்சி செய்வார். அதே நேரத்தில் வடிவேலு ஜாக்கி என்ற கதாபாத்திரத்தில் தோற்றத்தை வைத்தே காமெடி செய்திருப்பார். இப்படம் எதிர்பார்த்தபடி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறவில்லை.

Also read: மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பரத்.. ஜெயம் ரவியால் கேரியர் போச்சு என புலம்பல்

சுறா: எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு சுறா திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், தமன்னா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் விஜய்யின் 50வது படம். ஆனால் இப்படத்தில் இவருக்கு இதுவரை இல்லாத தோல்வியை கொடுத்த படமாக முத்திரை பதிந்து விட்டது. இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வி அடைந்தது. இதனால் தயாரிப்பாளர்களுக்கும் விஜய்க்கும் பெரிய பிரச்சினை வெடித்தது. அந்த அளவிற்கு தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்த படமாக விஜய் கேரியரில் அமைந்துவிட்டது.

குட்டிப்புலி: மு. முத்தையா இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு குட்டி புலி திரைப்படம் வெளிவந்தது. இதில் சசிகுமார், லட்சுமிமேனன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அம்மா செண்டிமெண்டை மையமாக வைத்து தாயின் மேல் அளவு கடந்த அன்பை காட்டும் ஒரு இளைஞனாக சசிகுமார் நடித்திருப்பார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தை விநியோகஸ்தம் செய்த சன் டிவிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

Also read: லியோவுக்கு கலாநிதி கொடுத்த கெடு.. அனிருத் ஐடியாவால் முழிக்கும் விஜய்

காஞ்சனா 3: ராகவா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு காஞ்சனா 3 திரைப்படம் வெளிவந்தது. இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் திகில் திரைப்படமாகவும் முனி படத்தின் தொடர்கதையாகவும் வெளிவந்தது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் சராசரியான லாபத்தை மட்டுமே தயாரிப்பாளருக்கு பெற்றுக் கொடுத்தது.

வேட்டைக்காரன்: பி பாபு சிவன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வேட்டைக்காரன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், அனுஷ்கா செட்டி, சங்கீதா படுகோன், சத்யன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று நினைக்கும் விஜய் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ரவுடிகளின் அராஜகத்தை ஒழிப்பதற்கு அவங்க வழியிலேயே போய் பதிலடி கொடுப்பார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்த படமாக மாறியது.

Also read: விஜய் மாதிரி யார் நாளும் நடிச்சிடலாம்.. ஆனா அஜித்தின் இந்த கேரக்டர் நடிக்கவே முடியாது

Trending News