Gossip: கடந்த சில மாதங்களாக டாப் ஹீரோக்களின் படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகி வருகிறது. அதில் மாஸ் ஹீரோ படம் வேற லெவலில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சில அதிருப்திகள் இருந்தாலும் படம் அவரின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்கின்றனர்.
இதில் நடிகரும் இறங்கி ரிஸ்க் எடுத்து பல விஷயங்கள் செய்திருக்கிறார். இது இப்படி இருக்க வெளிச்ச நடிகர் மலை போல் நம்பி இருந்த பிரம்மாண்ட படத்துக்கு இப்போது சிக்கல் வந்துள்ளது. அடித்து பிடித்து சில மாதங்களுக்கு முன்பே அவர் ரிலீஸ் தேதியை அறிவித்தார்.
அப்ப தான் யாரும் போட்டிக்கு வர மாட்டார்கள் என தப்பு கணக்கு போட்டு விட்டார் வெளிச்ச நடிகர். ஏனென்றால் இப்போது உச்ச நடிகர் அதே நாளில் தன் படத்தை வெளியிட நாள் குறித்து விட்டார்.
பின்வாங்கும் தயாரிப்பு
இதனால் செய்வதறியாது திகைத்துப் போய் இருக்கிறது பிரம்மாண்ட டீம். இவ்வளவு செய்தும் பிரயோஜனம் இல்லையே. இதனால் நடிகரும் என்ன செய்யலாம் என ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருக்கிறார்.
ஒரு பக்கம் துணிஞ்சு இறங்கலாம் நடக்கிறது நடக்கட்டும் என நடிகர் கூறியிருக்கிறார். ஆனால் தயாரிப்பு தரப்பு வசூலை சிந்தாமல் சிதறாமல் மொத்தமாக அல்ல பிளான் செய்தது.
அதில் உச்ச நடிகர் சத்தம் இல்லாமல் என்ட்ரி கொடுத்ததால் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கலாமா என்ற யோசனையில் தயாரிப்பாளர் இருக்கிறாராம். ஆனால் நடிகர் அதற்கு சம்மதித்தால் கேலி கிண்டலுக்கு ஆளாக கூடும். அதனால் இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோதும் என்கின்றனர்.
வெளிச்ச நடிகருக்கு ஆட்டம் காட்டும் உச்ச நடிகர்
- சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கூத்து, முகத்திரையை கிழித்த இயக்குனர்
- எவர்கிரீன் நடிகையை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஹீரோவின் மனைவி
- முதல் மனைவியை விட்டுக் கொடுக்காத ஹீரோ