Gossip: கெத்தாக டாப் ஹீரோக்களின் படங்களை கைவசப்படுத்திய அந்த தயாரிப்பு நிறுவனம் இப்போது சொல்ல முடியாத வேதனையில் திண்டாடி வருகிறது. வருட தொடக்கத்தில் உச்ச நடிகரின் வாரிசால் தயாரிப்பாளருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து ஹெட் நடிகரின் படமும் மாதக்கணக்கில் இழுத்தடித்ததோடு இயக்குனரோடும் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. எப்படியாவது படத்தை முடித்தால் போதும் என கையை மீறிய செலவையும் தயாரிப்பு தரப்பு அமைதியாக ஏற்றுக் கொண்டது.
இதற்கு முக்கிய காரணம் பிரம்மாண்ட இயக்குனரின் படம் வசூலை வாரி குவிக்கும் என்பதுதான். ஆனால் அந்த படம் வெளிவந்த கையோடு மோசமான விமர்சனங்களை பெற்றது. இதனால் தற்போது ஹெட் நடிகரின் படத்தை தான் தயாரிப்பு தரப்பு நம்பி இருக்கிறது.
பட்ஜெட்டை மீறி செலவு வைக்கும் இயக்குனர்
ஆனால் இயக்குனர் மீண்டும் மீண்டும் பட்ஜெட்டை எகிற வைத்து தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுக்கிறாராம். இதனால் இரு தரப்புக்கும் மோதல் முற்றிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளது.
இதைப் பார்த்த ஹெட் நடிகரோ உங்கள் பஞ்சாயத்தை முடிச்சிட்டு சொல்லுங்க என அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். இப்படியாக இரண்டு இயக்குனர்களும் போட்டி போட்டு தயாரிப்பாளரை பாடாய்படுத்தி வருகிறார்கள்.
இதனால் தயாரிப்பாளர் இனிமேல் பிரம்மாண்ட படங்களுக்கு கொஞ்சம் பிரேக் விடலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம். தற்போது உச்ச நடிகரின் படமும் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. அந்த படத்தை தான் தயாரிப்பு தரப்பு நம்பி இருக்கிறது.
தயாரிப்பாளரை சிக்கலில் சிக்க வைத்த இயக்குனர்
- பெரும்புள்ளியுடன் ரூம் போட்ட ஒன்னும் தெரியாத பாப்பா
- கண்ட்ரோல் பண்ணா விவாகரத்து தான்
- சீனியர் நடிகையின் பின்னால் சுற்றும் இளம் ஹீரோக்கள்