Salman Khan: ஏஆர் முருகதாஸ் தற்போது தமிழில் மதராஸி என்ற படத்தை எடுத்து வருகிறார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் முமரமாக நடந்து வருகிறது. இதை அடுத்த முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாக உள்ள படம் தான் சிக்கந்தர். இதில் சல்மான்கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான சர்கார் படத்தின் ரீமேக் தான் சிக்கந்தர் என்ற ஒரு செய்தி போய் கொண்டிருக்கிறது. இது குறித்து ஏஆர் முருகதாஸ் நேரடியாகவே சில விஷயங்களை கூறியிருக்கிறார்.
சிக்கந்தர் படம் பற்றி ஏ ஆர் முருகதாஸ் கூறிய செய்தி
அதாவது சிக்கந்தர் படம் புதிய கதையில் உருவாகிறது. மற்ற படங்களின் தழுவலாகவோ அல்லது மறு உருவாக்கமாகவோ இருக்காது என திட்டவட்டமாக கூறி இருக்கிறார். இதற்கும் சர்கார் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
ஆகையால் ஒரு புதிய கதையில் தான் சிக்கந்தர் படம் உருவாக இருக்கிறது. மேலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களினால் அந்த வாய்ப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
இந்த சூழலில் விஜய் கடைசியாக வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடிக்கிறார். இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்ற விஜய் கூறியதால் முருகதாசுடன் மீண்டும் இணையும் வாய்ப்பு இல்லாமல் போய் உள்ளது.