திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மேடையில் மனைவிக்கு கண்டிஷன் போட்ட ஏ ஆர் ரகுமான்.. எந்த நட்சத்திரங்களும் செய்யாத விஷயம்

ஏஆர் ரகுமான் இசையால் தமிழுக்கு பெருமை சேர்த்து வருகிறார் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவருடைய இசை பட்டித் தொட்டி பறந்து இவருடைய பாட்டு எல்லா பக்கமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்று இவரை பற்றி வர்ணித்துக் கொண்டே போகலாம். ஆனால் தற்போது இவர் செய்திருக்கும் ஒரு விஷயம் வைரலாகி இருக்கிறது.

அதாவது சமீபத்தில் ஒரு இசை விழாவில் ஏஆர் ரகுமானுக்கு முக்கிய விருது ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. அதை வாங்குவதற்கு அந்த நிகழ்ச்சிக்கு தன் மனைவியுடன் சென்று இருக்கிறார். அப்பொழுது ஏஆர் ரகுமான் அந்த விருதை வாங்கும் பொழுது இவரின் மனைவி சாய்ரா பானுவை மேடைக்கு அழைத்து இருக்கிறார். அதில் அவருடைய மனைவியை இரண்டு வார்த்தை பேசுமாறு கூறியிருக்கிறார்கள்.

Also read: நீங்க பத்து தலையா இருக்கலாம் ஆனா நான் ஒரே தல தான்.. இளையராஜா, ஏஆர் ரகுமானுக்கு வைக்கும் செக்

அதற்கு ஏஆர் ரகுமான் தயவு செய்து இந்தியில் பேச வேண்டாம். நீ சொல்ற விஷயத்தை முடிந்தவரை தமிழில் பேசு என்று கண்டிஷனாக சொல்லிவிட்டார். இதை கேட்டதும் அங்கு அமர்ந்து இருந்த முக்கிய பிரபலங்கள் மற்றும் மணிரத்தினம் போன்றவர்கள் கைதட்டி வாய்விட்டு சிரித்தனர். அத்துடன் அங்கு இருந்த ரசிகர்கள் அனைவரும் பெருமையுடன் அதிக கைத்தட்டில்கள் கொடுத்திருக்கிறார்கள்.

அதற்கு பின் ஏஆர் ரகுமான் சொன்னது போலவே அவருடைய மனைவி பேசும்பொழுது எனக்கு தமிழ் அதிகம் வராது என்று கூறி தெரிந்த தமிழ் வார்த்தையில் நான் பேசுகிறேன் என்று தமிழில் பேசி இருக்கிறார். அதாவது அவர் மனைவி பேசியது என்னவென்றால் ஏஆர் ரகுமானுக்கு நான் பெரிய ரசிகை அவருடைய குரலுக்கு நான் அடிமை என்று கூறுகிறார். அதன் பின் மீதமுள்ள விஷயங்களை ஆங்கிலத்தில் பேசி இருக்கிறார்.

Also read: நாலு செகண்ட்ல உயிர் தப்பிய மகன்.. பரபரப்பாக பேட்டி அளித்த ஏஆர் ரகுமான்

இவர் முன்னதாகவே ஒரு மேடையில் இந்தியில் நான் பேசமாட்டேன் என்று சொல்லி அங்கு இருந்த தொகுப்பாளரிடம் உங்களுக்கு தமிழ் தெரியும் தமிழில் பேசுங்கள். அதையும் மீறி நீங்கள் இந்தியில் பேசினால் நான் இந்த மேடையில் இருந்து இறங்கி போகிறேன் என்று இறங்கி இருக்கிறார். இது மிகவும் வைரலாகி வந்தது. தற்போது அதே மாதிரி தமிழில் இவர் மட்டும் பேசியதோடு இல்லாமல் அவர் மனைவியும் தமிழில் பேச வேண்டும் ஹிந்தியில் பேசாதே என்று சொல்லி தமிழைப் பெருமைப்படுத்தி இருக்கிறார்.

இவர் யார் என்ன சொன்னாலும் தமிழை விட்டுக் கொடுப்பதாக இல்லை. எந்த மேடையில் எங்கு சென்றாலும் தமிழில் தான் பேசுவேன் என்று இவர் சொல்வதை பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாக இருக்கிறது. அத்துடன் இதுவரை எந்த நட்சத்திரங்களும் செய்யாத விஷயத்தை இவர் செய்து வருகிறார் என்று நினைக்கும் பொழுது உண்மையிலேயே ஏ ஆர் ரகுமான் இஸ் தி கிரேட்.

Also read: திருப்தி அடையாத ரஜினிகாந்த்.. ஆழம் தெரியாமல் பாதாளத்தில் இறக்கி விட்ட அனிருத்

Trending News