இந்தியத் திரையுலகில் இசையமைப்பாளராக உலகளவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் ஏ.ஆர். ரஹ்மான்.ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்றுள்ள இவர், தற்போது நடிகராகவும் புதிய அவதாரம் எடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடன இயக்குநராகவும் நடிகராகவும் பிரபலமான பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மூன்வாக்’.காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
குறிப்பாக, இப்படத்திற்கு இசையமைத்திருப்பதுடன் மட்டுமல்லாமல், ஏ.ஆர். ரஹ்மான் ஒரு ஸ்பெஷல் அப்பியரன்ஸ் நடித்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்துள்ளது. இதுவரை தனது இசையின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ரஹ்மானை,தற்போது திரையில் ஒரு நடிகராகப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரபுதேவாவின் காமெடி கலந்த நடிப்பு ஒருபுறம் இருக்க, ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு ஸ்பெஷல் அப்பியரன்சும் இந்தப் படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தைச் சேர்த்துள்ளது. இசை மற்றும் நடிப்பு என இரண்டிலும் அவர் பங்களித்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.
ட்ரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, ரஹ்மானின் நடிப்பு எப்படி இருக்கும், பிரபுதேவாவுடன் அவர் ஸ்கிரீனில் தோன்றும் சீன்கள் எவ்வாறு அமையும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. இசைப்புயலின் இந்தப் புதிய முயற்சி ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.




