ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025

குஷ்பூவிடம் வேலையை காட்டிய ரஜினி பட இயக்குனர்.. அட, மீனா கிட்டயும் அதே வேலையை காட்டியிருக்காரே!

Rajinikanth: பொதுவாக இயக்குனர்கள் செய்யும் ஏடாகூட வேலைகளை ஆர்டிஸ்ட்கள் அவ்வளவாக வெளிக்கொண்டு வருவதில்லை.

இதற்கு காரணம் அந்த இயக்குனர் அடுத்தடுத்து படங்களில் வாய்ப்பு தர மாட்டார் என்பதால் தான்.

சில நேரங்களில் இது போன்ற இயக்குனர்கள் சீனியர் ஆர்ட்டிஸ்ட்களிடம் தங்களுடைய வேலையை காட்டி மொத்தமாக பல்பு வாங்கிக் கொள்வார்கள்.

ரஜினி பட இயக்குனர்

அந்த லிஸ்டில் தான் இயக்குனர் சிறுத்தை சிவா இருக்கிறார். சிறுத்தை சிவா ரஜினியின் அண்ணாத்தே படத்தில் குஷ்பூ மற்றும் மீனாவை நடிக்க வைத்தார்.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரிலீசுக்கு முன்பு அதிகமாக இருந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தான் சிறுத்தை சிவா வேலையை காட்டியிருக்கிறார்.

குஷ்பூ மற்றும் மீனா விடம் கதை சொல்லும் பொழுது இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாது. நீங்கள் இரண்டு பேரும் தான் படம் முழுக்க வருவீர்கள்.

ரஜினியுடன் பாம்பே சென்று அவருடைய தங்கச்சியை தேடுவீர்கள் என்று சொல்லி கால்ஷீட் வாங்கி இருக்கிறார். ஆனால் படப்பிடிப்பில் திடீரென நயன்தாரா என்ட்ரி ஆகி இருக்கிறார்.

அதன் பின்னர் மொத்த கதையையும் வேற மாதிரி எடுத்து இருக்கிறார்.

ரஜினியின் படத்திலிருந்து விலகி அவருடைய பெயரை கெடுத்துக் கொள்ள கூடாது என்று தான் குஷ்பு மற்றும் மீனா இருவரும் இந்த படத்தை முழுசாக நடித்துக் கொடுத்து முடித்திருக்கிறார்கள்.

Trending News