செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இனிமேல் வருவது எல்லாம் லாபம் தான்.. நானே வருவேன் செய்த வசூல் சாதனை

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கத்தில் தாணு தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இன்று பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதை ஒட்டி பல திரைப்படங்களும் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போடப்பட்டது. ஆனால் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் மட்டும் பொன்னியின் செல்வன் உடன் மோத தயாராகி ஒரு நாள் முன்னதாகவே வெளியானது. இது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

Also read:நானே வருவேன் படத்தில் அசத்திய தனுஷ்.. சீனியர் நடிகருக்கே டஃப் கொடுத்த சம்பவம்

இந்நிலையில் நானே வருவேன் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் படத்தின் கலெக்ஷனும் தற்போது ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அதாவது இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 45 கோடி ரூபாய்.

அந்தத் தொகையை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தயாரிப்பாளர் தாணு பெற்று விட்டாராம். எப்படி என்றால் நானே வருவேன் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி ஒரு பெரும் தொகையை கொடுத்து கைப்பற்றி இருக்கிறது. அதேபோன்று இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

Also read:தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

அந்த வகையில் தயாரிப்பாளருக்கு படத்தின் மொத்த பட்ஜெட்டும் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளிலேயே கிடைத்திருக்கிறது. அது போக தற்பொழுது படம் ரிலீஸ் ஆகி வசூலாகி கொண்டிருக்கும் அத்தனை பணமும் அவருக்கு லாபம் தான். இதனால்தான் அவர் நானே வருவேன் திரைப்படத்தை தைரியமாக பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக வெளியிட்டு இருக்கிறார்.

அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் எப்படியும் கல்லா கட்டிவிடலாம் என்று பக்காவாக திட்டம் போட்டு அவர் களம் இறங்கி இருக்கிறார். அவர் எதிர்பார்த்தது போலவே தற்போது இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

Also read:23 வயது இளம் வீரருடன் டேட் செய்யும் தனுஷ் பட நடிகை.. அப்பா 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயுது

Trending News