Ethirneechal Thodarkirathu Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனை எப்படியாவது வெளியே கூட்டிட்டு வரவேண்டும் என்று ஞானம் மற்றும் கதிர் போராடுகிறார்கள். ஆனால் அவர் மீது நான்கு மருமகள் சேர்ந்து போட்டிருக்கும் கேஸ் ரொம்பவே வலுவாக இருப்பதால் இப்போதைக்கு குணசேகரன் வெளியே வர வாய்ப்பில்லை என்ற நிலைமை ஆகிவிட்டது.
இதை நினைச்சு பார்த்து விசாலாட்சிக்கு உடம்பு முடியாமல் போய்விட்டது. அந்த நேரத்தில் வீட்டில் இருப்பவர்கள் ரேணுகா மற்றும் நந்தினிக்கு போன் பண்ணி வர சொல்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு போகும் பொழுது சக்திக்கும் தகவலை கொடுத்துவிட்டு ஜனனியை கூட்டிட்டு வர சொல்கிறார்கள்.
இப்படி அனைவரும் வீட்டிற்கு வந்த நிலையில் ஜனனி, மாமியாருக்கு என்னாச்சு என்று பக்கத்தில் இருந்து எல்லா விஷயங்களையும் பார்க்க ஆரம்பித்து விட்டார். அத்துடன் மாமியாருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவத்தையும் கொடுத்துவிட்டார். ஆனால் இதையெல்லாம் பார்த்த ஆதிரை, நந்தினியை குறை சொல்லும் விதமாக உங்களால பார்க்க முடியலன்னா எனக்கு போன் பண்ணி இருக்கலாம்.
நான் வந்து என்னுடைய அம்மாவை பார்த்திருப்பேன், உங்களுக்கு உங்களுடைய வேலை லட்சியம் தான் முக்கியம் என்றால் எனக்கு என்னுடைய அம்மா தான் முக்கியம் என்று வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்து விட்டார். உடனே கதிர், நந்தினியை எதுவும் சொல்லக்கூடாது என்பதற்காக பாதுகாக்க ஆரம்பித்து விட்டார்.
இதைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிரை அவங்க அவங்களுக்கு என்ன முக்கியமோ அதுதான் பாக்குறீங்க. எப்படி இருந்த நீ இப்பொழுது இப்படி மாறி இருக்கிறாய். அதனால் அம்மா மீது உனக்கு அக்கறை இல்லாமல் போய்விட்டதா என்று குணசேகரனை விட மோசமான வார்த்தைகளால் நோகடித்து ஆதிரை பேசுகிறார்.
வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறி விட்டதா என்று சொல்வதற்கு ஆதிரையின் குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே வருகிறது. ஆனாலும் யார் என்ன சொன்னாலும் எங்கள் லட்சியத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்பதற்கு ஏற்ப நந்தினி தொடர்ந்து அவருடைய மசாலா பொடி பிசினஸில் முன்னேற்றம் காட்ட முயற்சி எடுக்கிறார்.
இதைப் பார்த்த கரிகாலன் உங்க மாமியார் முடியாமல் கிடக்கும் பொழுது உங்களுக்கு மசாலா பொடி தான் முக்கியமா என்று கேள்வி கேட்கிறார். அதற்கு கொஞ்சம் கூட யோசிக்க இல்லாமல் எனக்கு மல்லி பொடி தான் முக்கியம் என்று பதிலடி கொடுத்து விட்டார். அந்த வகையில் இந்த மருமகள்களின் ஆட்டத்தை யாராலயும் இனி தடுக்க முடியாது.
இதில் இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால் ஜனனிக்கு சப்போர்ட்டாக சக்தி மட்டும் இருக்கிறார். இருந்தாலும் நந்தினியை யாரும் எதுவும் சொல்லாமல் பொண்டாட்டி லட்சியத்திற்கு குறுக்கே நிக்காமல் கதிர் பாதுகாத்து இருப்பது பார்க்கக் நன்றாக இருக்கிறது. இந்த ஞானம் தான் அப்போதிலிருந்து சொல் புத்தியும் இல்லாமல் தன் புத்தியும் இல்லாமல் தடுமாறிக் கொண்டே இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மாமியார் கேட்டுக்கொண்டபடி ஈஸ்வரியை வர வைப்பதற்கு சில பிளான்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஈஸ்வரிடம் பேசிய விசாலாட்சி என்னுடன் வந்து ஒரு நாள் தங்கிட்டு போகணும் என்று கூப்பிடுகிறார். ஈஸ்வரி மனசு கேட்காமல் மறுபடியும் அந்த வீட்டிற்கு வந்து விடுவார். வந்த பிறகு எப்படியாவது கெஞ்சி குணசேகரனை வெளியிலே கூட்டிட்டு வந்துவிடலாம் என மாமியார் காய் நகர்த்துகிறார்.