ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரோலெக்ஸ் ரசிகர்களுக்கு வச்ச பெரிய ஆப்பு.. இரும்பு கை மாயாவி படத்தை மறந்துட வேண்டி தான்

Irumbukai Maayavi: நடிகர் சூர்யா நிறைய படங்களில் மெனக்கெட்டு நடித்து அது ரசிகர்களின் மனதில் நிற்காமல் கூட போயிருக்கிறது. ஆனால் இரண்டே நிமிடங்கள் ஒரு படத்தில் வந்து, பெரிய அளவில் அவருக்கு ரீச் கொடுத்திருக்கிறது என்றால் விக்ரம் படத்தில் வந்த ரோலக்ஸ் கேரக்டர் தான். லோகேஷ் கனகராஜ் உடைய சினிமா டிக்கெட் யுனிவர்சில் சூர்யாவும் இருக்கிறார் என்ற கொண்டாட்டமே சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் இருந்தது.

லோகேஷ் கனகராஜ் தன்னுடைய விக்ரம் படத்தில் இரண்டு நிமிடமே காட்டிய ரோலக்ஸ் கேரக்டரை இரண்டரை மணி நேரம் படமாக காட்ட வேண்டும் என்பது சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய ஆசையாக இருந்தது. அப்போதுதான் லோகேஷ் கனகராஜ் கைதி படத்திற்கு முன்பே அவர் சூர்யாவுடன் பணிபுரிய இருந்ததாகவும், அந்த படத்திற்கு இரும்பு கை மாயாவி என பெயரிடப்பட்டிருந்ததாகவும், ஒரு சில காரணங்களால் இருவரும் இணைய முடியாமல் போய்விட்டதாகவும் சொல்லியிருந்தார்.

சூர்யா மற்றும் லோகேஷ் கனகராஜுக்கு இடையே நல்ல ஒரு புரிதல் ஏற்பட்டதால் கண்டிப்பாக இரும்பு கை மாயாவி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் லோகேஷ் தற்போது தான் லியோ படத்தை முடித்திருக்கிறார். அந்த படம் முடித்த கையோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படத்தை இயக்க இருக்கிறார். ஏற்கனவே விக்ரம் 2, கைதி 2 போன்ற படங்கள் அவருக்கு வெயிட்டிங்கில் காத்திருக்கின்றன.

Also Read:சூர்யா vs ரன்பீர் கபூர்.. புது புரளியை கிளப்பி மொத்தமாய் வாங்கி கட்டி கொள்ளும் வடக்கன்ஸ், அட! இது வேற லெவல் சண்டை

இப்படி இருக்கும் பட்சத்தில் இரும்பு கை மாயாவி எப்போது தொடங்கப்படும் என சினிமா ரசிகர்கள் பெரிய ஏக்கமாகவே காத்திருந்தார்கள். அதிக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படம் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா. உண்மையில் சூர்யா ரசிகர்களாக இருக்கட்டும், லோகேஷின் ரசிகர்களாக இருக்கட்டும், தமிழ் சினிமா ரசிகர்களாக இருக்கட்டும் தற்போதைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இரும்பு கை மாயாவி படம் கைவிடப் போகின்ற சூழ்நிலையில் இருக்கின்றது.

இரும்பு கை மாயாவி படத்தை மறந்துட வேண்டி தான்

மரகத நாணயம், ராட்சசன், இரவுக்கு ஆயிரம் கண்கள், ஓ மை கடவுளே போன்ற படங்களை தயாரித்தவர்தான் டில்லி பாபு. இவருடைய மகன் தற்போது ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். இவர் தன்னுடைய படத்திற்கு தேர்ந்தெடுத்திருக்கும் கதை கிட்டத்தட்ட இரும்புக்கை மாயாவி படத்தின் கதையை தழுவியது தானாம். இந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டால், கண்டிப்பாக இரும்பு கை மாயாவி படம் வெளிவர வாய்ப்பு இல்லை.

எப்போதுமே வித்தியாசமான கதைகளை கொடுக்க விரும்புபவர் லோகேஷ் கனகராஜ். தன்னுடைய கதை தழுவலில் வேறொரு படம் ரிலீஸ் ஆகிவிட்டால் கண்டிப்பாக அவர் அதேபோன்ற ஒரு கதையை எடுப்பதற்கு வாய்ப்பே கிடையாது. இதனால் தான் இரும்பு கை மாயாவி படத்தை இனி தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்து விட வேண்டியது தான் என கோலிவுட் வட்டாரம் பேசி வருகிறது.

Also Read:சூர்யா படத்தால் நெஞ்சுவலி வராத குறை தான்.. அத்தனை கோடிகளை இழந்து இடி தாங்கியாய் நிற்கும் தயாரிப்பாளர்

Trending News