திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

புரட்சி செய்ய புறப்பட்ட புரட்சித் தளபதி.. எம்ஜிஆர் ரசிகர்களை பிடிக்க, விஷால் செய்யும் சேட்டை

அரசியலுக்கும், நடிகர்களுக்கும் எப்போது ஒரு ஒற்றுமை இருக்கும். தங்களது படங்களில் அரசியல் வசனங்களை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ பேசுவது. ரசிகர்கள் அதிகமானால் அரசியலில் கால் பதிக்க உள்ளதாக தெரிவிப்பது என எல்லா வேலைகளையும் செய்து வருவர். அதிலும் சில நடிகர்கள் கட்சியையே தொடங்கி நடத்தி வருவார்கள்.

சில நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்காக மக்களுக்கு கல்வி உதவி, பண உதவி என எதையாவது செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வழி வகுப்பார்கள். அந்த வகையில் நடிகர் விஷால் இது போன்ற வேலையை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். சென்னையில் வெள்ளம் வந்தபோதும், வர்தா புயல் உள்ளிட்ட பெரும் சேதம் வந்த போதும் பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை நேரடியாகவே சென்று வழங்கினார்.

Also Read: ஆருயிர், ஓருயிர்களுக்கு இடையே வந்த பிளவு.. ஒரே படத்தால் விஷால் கூட்டணிக்குள் வந்த அடிதடி

இதற்கு ஒருபடி மேல் சென்று தனியார் தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோ ஒன்றில், பணத் தேவைக்காக கஷ்டப்படும் சாமானிய மக்களை அழைத்து யாரேனும் பிரபலங்கள் மூலமாக பணத்தை வசூல் செய்து அவர்களுக்கு உதவியும் செய்தார் விஷால். இது எல்லாத்துக்கும் காரணம் விஷால் அரசியல் வருவதற்கு முற்படுகிறார் என பலரும் பேசிய நிலையில், விஷாலும் சில நேரங்களில் ஒப்புக்கொண்டார்.

மேலும் 2017 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே. நகர் தொகுதியில் விஷால் தனித்து போட்டியிட முற்பட்டபோது அவரது நாமினேஷன் நிராகரிக்கப்பட்டது. இதனிடையே தற்போது படங்களில் நடிக்க ஆயத்தமாகியுள்ள விஷாலின் படங்களும் தொடர் தோல்வியை அடைந்து வருகிறது. அண்மையில் பேன் இந்திய படமாக ரிலீசான லத்தி படம் பெரும் தோல்வியடைந்ததையடுத்து, தற்போது விஷால் ஒரு புதுவிதமான ஆயுதத்தை தன் கையில் எடுத்துள்ளார்.

Also Read: மார்க்கெட் குறைந்தாலும் அநியாயம் பண்ணும் விஷால்.. மாட்டிக்கொண்டு புலம்பும் இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் நடிக்க வருபவர்கள் அரசியலில் நுழைய ஆசைப்படுகிறர்கள் என்றால் அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் தான் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இவரை போல் இன்னொரு நடிகரும், அரசியல்வாதியும் உருவாக வாய்ப்பே இல்லை என்ற அளவிற்கு தனது பணியை சிறப்பாக செய்தவர். யாருக்காவது அரசியலில் இறங்க வேண்டும் என ஆசைப்பட்டால் முதலில் எம்.ஜி.ஆரை புகழ்ந்துவிட்டு தான் மறுவேளை செய்வார்கள்.

அதனடிப்படையில் நடிகர் விஷால் எம்.ஜி ஆரின் முகப்படத்தை தனது இடது புற நெஞ்சில் பச்சைக் குத்தியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைராகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் தலைகீழ நின்னு தண்ணிக் குடிச்சாலும் உங்களுக்கு ஒட்டு போடா முடியாது என விஷாலை வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் நீங்கள் புரட்சி தளபதியாக இருந்தாலும் புரட்சி தலைவராக ஒருபோதும் ஆகமுடியாது என தெரிவித்து வருகின்றனர்.

எம்ஜிஆரை நெஞ்சில் பச்சை குத்திய விஷால்

vishal-mgr
vishal-mgr

Also Read: விஜய் சேதுபதி, விஷால் நம்பி ஏமாற்றமடைந்த கார்த்திக் சுப்புராஜ்.! அதிரடியாக எடுத்த முடிவு

Trending News