Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

7 ஆண்டுகளாகத் தொடர்ந்த காதல்.. திருமணத்தில் இணைந்த மிருணாளினி – மகாவிஷ்ணு!

7 ஆண்டுகளாகத் தொடர்ந்த காதல்.. திருமணத்தில் இணைந்த மிருணாளினி – மகாவிஷ்ணு!

டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமான மிருணாளினி ரவி, சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சாம்பியன், எனிமி, கோப்ரா, ரோமியோ உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இந்நிலையில், பரம்பொருள் அறக்கட்டளையின் (Paramporul Foundation) நிறுவனர் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவாளரான மகாவிஷ்ணு (ரவிசங்கர்) என்பவருக்கும் மிருணாளினி ரவிக்கும் மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நவம்பர் 15, 2026 அன்று இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்கள் இருவரும் சுமார் 7 ஆண்டுகளாக நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், பின்னர் காதலிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றுள்ளது.

மிகவும் நெருங்கிய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் குறிப்பிட்ட சில நண்பர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

பாரம்பரிய உடையான பட்டுப் புடவையில் மிருணாளினியும், பட்டு வேட்டி, சட்டையில் மகாவிஷ்ணுவும் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.