சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அக்கடதேசத்தில் பரிகாரம் தேட சென்ற காதல் ஜோடி.. கையேந்தி நிற்கும் நம்பர் நடிகை

காதலிக்கும் போது எல்லாம் சரியாக இருந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு யார் கண்ணு பட்டுச்சோ! இந்த நட்சத்திர தம்பதியர்களுக்கு எல்லா விஷயத்திலும் பிரச்சினை பூதாகரமாக கிளம்புகிறது. இதனால் டாப் நடிகரின் படமும் அந்த டைரக்டர் கணவரின் கையை விட்டு நழுவியது.

இதனால் பயங்கர அப்செட்டில் இருந்த கணவருக்கு நம்பர் நடிகை அக்கடதேசத்தில் வாய்ப்பு கொடுக்கும்படி பெரிய பெரிய நடிகர்களிடம் கையேந்தி நிற்கிறார். கடைசியில் பாலிவுட் இளம் நடிகரிடம் கணவர் எடுத்த படத்தை எல்லாம் ஓட்டி காட்டி ஒரு வழியா சம்மதம் வாங்கி விட்டார்.

Also Read: ஆடிஷனில் இயக்குனர்கள் செய்த கேவலம்.. டாப்பைக் கழட்டி போராட்டம் செய்த கவர்ச்சி புயல்

இதனால் ரொம்பவே ஹேப்பியான நம்பர் நடிகையின் கணவர் உதாசினப்படுத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என சூப்பரான அறிவிப்பை விரைவில் வெளியிட போகிறார். கோலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் என்ன! பாலிவுட்டில் நான் வாங்கித் தருகிறேன் என்று கணவரை சரியான இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளார் அந்த நம்பர் நடிகை.

அவருக்கு இருக்கும் டேலன்ட்டை வைத்து எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட்டால் இழந்ததெல்லாம் மறுபடியும் தாமாகவே வந்துவிடும். இதற்காக மனைவியுடன் கணவரும் வெறித்தனமாக பாலிவுட்டில் களம் இறங்கியுள்ளார். மேலும் இந்த நடிகை தற்போது காப்பி இயக்குனரின் பாலிவுட் படத்தில் பெரிய நடிகருடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: மசாஜ் செய்து நடிகையை கரெக்ட் செய்த நடிகர்.. சித்து விளையாட்டு பலிக்காததால் வாங்கிய அறை

இந்த சூழலில் உறவினர் கொடுக்கும் சாபம் தான் நம்மளை சுற்றி சுற்றி அடிக்கிறது. அதற்காக பரிகாரங்களையும் அந்த நடிகை செய்ததாக கூறப்பட்டது. அதன்பின் நம்பர் நடிகையின் கணவருக்கு பாலிவுட்டில் இளம் நடிகரை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்ததும் பொட்டியை கட்டிக்கொண்டு கணவரையும் கையோடு அழைத்து சென்று விட்டார்.

Trending News