வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜய்யை சாகும் வரை மறக்க மாட்டேன்.. பிரபல ஃபைட்டரின் பரபரப்பான பேட்டி

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய். பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படமான வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.

இன்னிலையில் விஜயை குறித்து பேசிய பிரபல ஃபைட்டரின் பரபரப்பான பேட்டி தற்போது வைரலாக பரவுகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் விமல்-அஞ்சலி இணைந்து நடித்திருக்கும் கலகலப்பு படத்தில் சந்தானத்துடன் பேய் கதாபாத்திரத்தில் காமெடி நடிகராக நடித்திருப்பவர் சண்டைக் கலைஞர் கிருஷ்ணன்.

அதன்பிறகு சந்தானத்துடன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திலும் கிருஷ்ணன் இணைந்து நடித்திருப்பார். இப்படி இந்திய சினிமாவில் சண்டை கலைஞர் ஆக பல படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் தங்களுக்கென்று தனி அங்கீகாரம் இல்லை என வருத்தப்பட்டிருக்கிறார்.

மேலும் மற்ற நடிகர்கள் தங்களை பார்க்கும் கண்ணோட்டத்தை குறித்தும் பேசியுள்ளார். நடிகர்கள் சிலர் தங்களை பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆனால் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும்போது அவர்கள் எங்களிடம் அன்பாகப் பேசுவது அவ்வளவு சந்தோசமாக இருக்கும்.

சில  சமயம் சண்டை போடும்போது பல்டி அடித்து விழும் நேரத்தில் ‘கவனமாக செய்ய கூடாதா’ என தாய் தந்தை போல் நடிகர்கள் பரிவுடன் பேசுவதுண்டு. இப்படி எல்லாம் விஜய், விஜய் சேதுபதி போன்ற சில நடிகர்கள் அவர்களது படத்தில் நடிக்கும் சண்டை கலைஞர்களுக்கான அக்கறையுடன் பேசுவார்கள்

அதிலும் நடிகர்களிலேயே தளபதி விஜய் தான் சண்டைக் கலைஞர்களை மதிக்கும் ஒரே நடிகர். எங்களைப் பெருமைப்படுத்தி பேசும் அவரை சாகும் வரை மறக்க மாட்டேன் என ஃபைட்டர் கிருஷ்ணன் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். இவர் பேட்டி அளித்திருக்கும் இந்த வீடியோவை தற்போது தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர்.

Trending News